புதன், 16 அக்டோபர், 2019

ராஜீவ் கொலையை பயன்படுத்தி பார்ப்பன ஆட்சியை நிறுவிய பார்ப்பனர்கள் .. திமுகவை அழிக்க ...


வளன்பிச்சைவளன் : பதிவு - 146
ஈழப்போரும் தமிழக ஈழத்தமிழர்களின் பொறுப்பும் கடமையும்
திமுக மீது திட்டமிட்டு தாக்குதல்
ராஜீவ் கொலைக்கு திமுகவே காரணம் அதிமுக காங்கிரஸ்
காவல் துறை பாதுகாப்போடு முரசொலிக்கு தீவைப்பு
ராஜீவை கொன்றது கருணாநிதி வாழப்பாடி அக்கிரம பிரச்சாரம் தமிழகமெங்கும் திமுகவினர் மீது
வன்முறை தாக்குதல்
இந்திய பார்பணீயத்தின் சதி திமுகவை அழிக்க முயற்சி
ராஜீவ் கொலையை பயன்படுத்தி, ராஜாஜி க்கு பிறகு ஒரு பார்பன தலைமையை உருவாக்க இந்திய பார்பணீயம் முயன்றது. தி.மு.க மீது வீண்பழி சுமத்தி, விடுதலைப் புலிகளை ஆதரித்தது திமுக அதன் விளைவே இன்று தமிழகத்தில் ராஜீவ் படுகொலை என தமிழகம் எங்கும் அதிமுக வின் ஜெயலலிதாவும் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு அதிமுகவினரையும், காங்கிரஸ்காரர்களையும் தூண்டி விட்டு தமிழகம் எங்கும் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். தி.மு.க அங்கம்வகிக்கும் தேசிய முன்னணி அலுவலகங்கள் மாநிலம்
முழுவதும் தீக்கிரையாக்க பட்டது. தி.மு.க ஜனதாதள, இடது சாரி கொட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது. தி.மு.க தேசிய முன்னணி, இடது சாரி வேட்பாளர்களை வீடு புகுந்து தாக்கினர் சொத்துகளை சூறையாடினர், திமுக வினரை தேடி தேடி தாக்கினர் பல்லாயிரம் திமுக வினர் இடம் பெயர்ந்து தலைமறைவாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். 

பிரச்சார வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன வாழப்பாடி ராமமூர்த்தி கூசாமல் திமுக தலைவர் கருணாநிதி தான் கொலைசெய்தார் என உச்சகட்ட புளுகு மூட்டைகளை அவிழ்த்து தேர்தல் வெற்றிக்காக இழிவான பிரச்சார யுக்திகளை பயன் படுத்தினார். இதன் மூலம் ராஜீவ் கொலையில் உணர்ச்சி பிளம்பாய் இருந்த தமிழர்களிடம் ராஜீவ் இறந்து கிடக்கும் சுவரொட்டி களை ஒட்டி அனுதாபஅலையை பெற கேவலமான முயற்சிகளில் இறங்கி இந்திய பார்பணீயத்தின் கனவான தமிழகத்தில் பார்பன முதல்வர் என்பதை நனவாக்கி ஜெயலலிதா வின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது இந்த ராஜீவ் படுகொலையே.


திமுக தலைவர் உயிருக்கு ஆபத்தென்றால் வாழப்பாடியே பொறுப்பு
நடைபெற்று விட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒட்டி அ. இ. அ. தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சி வேட்பாளர்களும் நிர்வாகிகளும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வன்முறை வெறியாட்டம் ஆடி பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை க்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்களை கண்டு பிடிப்பதிலும் தண்டிப்பதிலும் அரசு இயந்திரத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தேசிய முன்னணி, இடது சாரிகள், கூட்டணி கட்சிகள் கையெழுத்து இட்டு தீர்மானம் நிறைவேற்றுகின்றன.
இந்நிலையில் குற்றவாளி களை கண்டறிய துப்பறியும் துறை ஈடுபட்டு வருகிறது. கொடிய நோக்கத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி அறிக்கைகள் விடுவதும், அந்த அறிக்கைகளில் திமுக வை யும் தலைவர் கலைஞர் அவர்களையும் உள்நோக்கத்துடன் குறிப்பிடுவது மேலும் வன்முறையை தூண்டி கலவரம் உருவாக்குவதுடன் திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கும் எனைய தலைவர் களுக்கும் ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்
திமுக வை தொடர்புபடுத்தி பழிதூற்றி பழிவாங்கிட என்னும் இந்த முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் திமுக தலைவர் கலைஞர், முன்னனி தலைவர்கள், தோழமை கட்சியினர் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதன் முழுப் பொறுப்பும் வாழப்பாடி ராமமூர்த்தியையே சாரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த அராஜக போக்கை வளரவிடலாமா என்பதை காங்கிரஸில் உள்ள பண்பாளர்கள் எண்ணிட விழைகிறேன். தமிழ் நாட்டில் அமைதியாக தேர்தலை விரும்பாமல் ஒரு உள்நாட்டு அராஜக யுத்தம் நடத்துமாறு தனது கட்சியினரை தயார் செய்து வருகிறார் இது காங்கிரஸ் பாரம்பரியத்திற்கு அழகல்ல நெறியுமல்ல
இவ்வாறு பொறுப்பேற்ற பேச்சுக்களால் தமிழ் நாட்டை இரத்தக் காடாக்க வேண்டாம் என்று எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முரசொலிஅலுவலகம்தீக்கிரை
திமுகழகத்தின் போர் வாளும் கேடயமுமான முரசொலி நாளேட்டின் அலுவலகத்தை முழுவதுமாக தகர்த்து அதனை செயல்படாது தடுக்கின்ற நோக்கில் போலீஸ் ஒத்துழைப்போடு ஒரு திட்டமிட்ட சதி நடத்தப்பட்டது. வெறியாட்டம் முரசொலி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
கடப்பாரை, பெட்ரோல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வன்முறை கும்பல் 22 ம் தேதி விடியற்காலை 6மணி அளவில் முரசொலி அலுவலகத்திற்குள் புகுந்து 7 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் தீவைப்பு சம்பவங்களை நடத்தியது
அவசர போலீஸ் தொலைபேசி எண்ணோடும் உயர் அதிகாரிகள் பலரோடு தொடர்பு கொண்டும் இதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் போலீஸ் மேற்கொள்ள வில்லை. தீ எரிந்து கொண்டிருந்ததை தீயணைப்பு படையினருக்கு தெரிவித்தும் அவர்களும் வரவில்லை இதை எல்லாம் பார்க்கும் போது இந்த சம்பவங்கள் அதிகாரிகள் துணையோடு காங்கிரஸ் நடத்திய திட்டமிட்ட செயலாகவே கருதப்படுகிறது. சம்பவம் நடந்து முடிந்த பிறகும் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது இதை மேலும் ஊர்ஜிதம் செய்கிறது
இந்த தாக்குதலில் முரசொலி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப் பட்ட வாகனங்கள், ஆப்செட் அச்சகம் அச்சு காகிதம் கம்யூட்டர் பொறிகள் அனைத்துக் நாசம் செய்யப் பட்டன
"முரசொலி இதை தாங்கிக் கொள்ளும்"
சேரன் செங்குட்டுவனின் சிலப்பதிகாரம் என்று முரசொலி யை அண்ணா எழுதி, போற்றிய முரசொலி திமுகழகத்திற்கு போர்வாளாக, கேடயமாக பணியாற்றி வருகிறது. இதனை சகிக்காத எதிரிகள் காவல் துறை ஒத்துழைப்போடு சதித்திட்டம் தீட்டி முரசொலியை தகர்த்தது உள்ளனர்.
லண்டன் நகரில் குண்டுகள் சரமாரியாக பொழிந்த போது வீராவேசமாக "London will take it" என சர்ச்சில் முழங்கினாரே அதைப் போல தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக முரசொலி இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும். ஆம் "Murasoli will take it" என தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகமுக்கியஅறிவிப்பு
ராஜீவ் கொலைக்கு திமுக வையும், திமுக தலைவர் கருணாநிதி அவர்களையும் தொடர்பு படுத்தி சில ஊர்களில் அதிமுகவினரும், காங்கிரஸ் காரர்களும் துண்டு அறிக்கை வெளியிட்டும் சுவரொட்டி அடித்து வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்ததற்கான ஆதாரங்கள் சில ஊர்களில் கிடைத்துள்ளன.
இதனால் அவதூறு பிரச்சாரம் செய்பவர், செய்வதற்கு துணை புரிவோர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதென தலைமை கழகம் முடிவு செய்துள்ளதால எந்தெந்த ஊர்களில் இது போன்ற துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி அச்சடிக்கப்பட்டு உள்ளனவோ அந்த ஊர் போலீஸில் புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க சொல்வதுடன் அவ்வாறு பிரச்சாரம் செய்யப் பட்டதற்கான ஆதாரத்துடன் உடனடியாக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தலைமை கழகம்
தி. மு.க
தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக