Muralidharan Pb :
வரலாறு
என்றால் என்ன? 33 ஆண்டுக்கு பிறகும் இப்படி
யாராவது ஒருவன் அதைப் பற்றி பேசி அதன் பிண்ணனியை உலகுக்கு கூறிட வேண்டும். ஆனால் தவறான வகையில் பேசுபவனுக்கு தகுந்த வழியில் வரலாறை மூளைக்குள் எட்டுகிற மாதிரி கூற வேண்டும்.
(மீள் பதிவிலிருந்து)
எப்போதுமே சில சரித்திர சின்னங்கள் தானாக வந்து அமைவதில்லை. அதற்கு பின்னால் பல அவமானங்கள், சினம், சீற்றம் உள்ளடங்கி இருக்கும்.
அப்பேற்பட்ட ஒரு அவமானத்தையும், அதன் பின்னர் நடந்த ஒரு நினைவையும் இன்று காண்போம். அப்போதெல்லாம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற வளாகத்திலேயே தான் ஒவ்வொரு சட்டமன்ற கட்சிகளின் அலுவலகம் அமைந்திருந்தது. 1985 மே மாதம், திமுக தலைவருக்கு ஒரு கடிதம் வருகிறது, அதுவும் பேரவைத்தலைவர் எழுதாமல், துறைச் செயலாளர் எழுதியது, 'பேரவையில் உள்ள திமுக அலுவலகத்தில் சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாகவும், திமுகவின் தலைவர்கள் வண்டிகள் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அது பெரும் இடைஞ்சலாக இருப்பதாலும், வெறும் 26 சட்டமன்ற உறுப்பினர்களே கொண்ட கட்சிக்கு பெரிய அறை தேவையில்லை, காங்கிரஸ் கட்சியினர் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் அறையை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்' குறிப்பிட்டிருந்தது.
கட்சித்தலைவர் கலைஞர் பதிலளிக்கையில்,'இனி தடையாக என்றுமே கார்களை நிறுத்தமாட்டோம், சுவரொட்டிகள் ஒட்டமாட்டோம் .காங்கிரஸ் காலத்திலேயே திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடம்,
மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்த போதே அன்று ஆண்ட திமுக இதே இடத்தை ஒதுக்கி இருந்தது. எனவே தொந்தரவு கொடுக்காமல் நாங்கள் இடத்தில் அலுவலகம் நடத்துகிறோம்' என்று பதில் அளித்தார்.
எதிர்கட்சித் தலைவர் பேராசிரியருக்கு மீண்டும் ஒரு கடிதம் பேரவைச் செயலாளரிடம் இருந்து வருகிறது. '31/05/1985 க்குள் நீங்கள் சட்டமன்ற அலுவலகத்தை மாற்றிவிட கெடு கொடுக்கப்படுகிறது. அப்படி நீங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் பலவந்தமாக உங்களுக்கு ஒதுக்கிய அறைகளை கைப்பற்ற நேரிடும்' என்றும் எழுதி இருந்தார்.
மே 30ம் தேதி ஈழத்தமிழர்களுக்காக ஒரு போராட்டத்தில் தலைவர், பேராசிரியர் உட்பட பெரிய தலைவர்கள் அனைவருமே கைதாகி மாலையில் விடுதலையானார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுகவின் சட்டமன்ற அலுவலகம் தகர்க்கப்பட்டது. பெயர் பலகை பூட்ஸ் கால்களால் உடைக்கப்பட்டது.
மேலும் திமுக கூட்டணியில் பங்கேற்ற மற்ற காட்சிகளை சுயேச்சைகள் என கருதுவதாகவும் அவர்களுக்கு தனியே அறை ஒதுக்கப்படவில்லை. இந்த அட்டூழியங்கள் அனைத்துமே பொறுக்காத திமுக மற்றும் தோழமை கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் படியாக சட்ட மன்ற குழுவிலிருந்து வெளியேறின. மூன்று மாதம் கழித்து இறங்கி வந்த அதிமுக அரசு சுயேச்சைகள் என்று எதிர்க்கட்சியை அழைக்கமாட்டடோம், மீண்டும் சட்டமன்ற குழுவில் அனைவரும் இடம் பெறுமாறு கேட்டுக்கொள்ள, எதிர் கட்சிகளும் சமரசம் செய்துக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்ததன. சட்டமன்றக்குழுவில் மீண்டும் இடம்பெற்றனர். அதன் விளைவாக மீண்டும் சட்டமன்ற கட்சிகளின் அலுவலகம் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் முன்பை விட மிகவும் சிறிய இடம்.
இந்நிலையில் திமுக தனக்கென்று ஒரு தனி பெரிய அலுவலகம் அமைந்தாலொழிய இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காது என்று முடிவெடுத்து, மக்களிடமும், தொண்டர்களிடமும் நன்கொடை பெற்றிட முடிவு செய்யப்பட்டது.
அண்ணா சாலையிலே இடம் வாங்கி, கட்டிடம் கட்ட ஆரம்பித்தது. 1987 செப்டெம்பர் 16ம் தேதி முப்பெரும் விழாவோடு திமுக அறக்கட்டளை சார்பாக அண்ணா அறிவாலயம் என்று பெயரிட்ட கட்டிடம் திமுகவின் தலைமை அலுவலகமாகி இன்று வரை மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பேராசிரியர் முன்னிலையிலும், திருமதி ராணி அண்ணாதுரை முன்னிலையிலும் கலைஞர் திறந்துவைத்தார் என்பது திமுகவின் கட்சி வரலாற்றில் மிகப்பெரிய சாதனை.
அந்த நேரத்தில் டி ஆர் பாலு சென்னை மாவட்ட செயலாளர் என்கிற முறையில் அதிக நன்கொடை பெற்றுத் தந்தார் என்று அவருக்கு கணையாழி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் 5 லட்ச ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றுத்தந்த மாவட்ட செயலாளர்களில் நெல்லை மாவட்ட செயலாளர் இலக்குவனருக்கு பதிலாக வை.கோபாலசாமிக்கும் அணிவித்து பாராட்டி, அவருக்கும் கலைஞர் கையால் கணையாழி பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே அசிங்கப் படுத்திய எம்ஜிஆர் உயிரோடு இருந்த போதே அவர் கண்முன்னரே வென்று காட்டிய பெருமை தலைவர் கலைஞரையே சேரும். அதை கட்ட முற்பட்டபோது என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அதையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள் என்பது வேறு கதை.
சுருக்கமாய் சொல்வதென்றால் 'அன்று அவமானம் இன்று வெகுமானம்'
அதே நேரத்தில் வேறு ஒரு தகவல். பிறகு அமைந்த அதிமுக அரசில் முதலமைச்சர் ஜெயலலிதா அண்ணா அறிவாலயம் போன்றே ஒரு தலைமைச் செயலகம் அதிமுக சார்பில் கட்டிட அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சப்பையர் திரையரங்கை வாங்கி இன்று வரை அப்படியே இருப்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி
முதல் சொன்னது வரலாறு, பின்னர் அதிமுகவால் வாங்கப்பட்டது வெறும் வெட்டி வேலை.
முதலில் நடைபெற்றது குறிக்கொள், பின்னது குறுக்கு புத்தி.
முடிவாக,
இப்படி அரும்பாடுபட்டு தொண்டர்களின் குருதி, வியர்வை துணையோடு ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கியவர் பஞ்சமி நிலத்தில் வாங்கியிருப்பார் என்று சொல்கிறவன் மனநலம் குன்றியவனாக இருப்பான், அதை வைத்து பேசி அரசியல் லாபம் தேடுபவன் முத்திப் போன முட்டாளாகத் தான் இருப்பான்.
முரளிதரன் PB
19/10/2019

வரலாற்று தலைவனின் இமாலய சாதனையை குறைத்து மதிப்பிட்டு குரைக்கும் நாய்களை விரட்டியடிப்போம் விரைவில்..
பதிலளிநீக்கு