சனி, 19 அக்டோபர், 2019

ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்னோம்ன்னு ஜம்பம் பேசி ... சீமானே ...


எம் புள்ள விடுதலையாகணும் என முப்பது வருஷம் போராடினேன்
செங்கொடிங்கிற பிள்ளை தன்னை எரிச்சி தியாகம் பண்ணுச்சு ....
தமிழ்நாட்டில் இருக்கிற காங்கிரஸ் கட்சியை தவிர அத்துனை பேரும் கட்சி பேதம் மறந்து எம் புள்ள விடுதலைக்கு குரல் கொடுத்தாங்க போராடினாங்க எல்லாவற்றிற்கும் மேல தம்பி திருமாவளவன் டெல்லிக்கு அழச்சிட்டு போயி அமித்ஷாகிட்டயே என் புள்ள விடுதலைக்கு கோரிக்கை வைத்தாரு
தமிழக அரசும் எம் புள்ளைய விடுதலை பண்ணணும் என தீர்மானம் நிறைவேத்துச்சு ...
காலம் கனிந்து எம் புள்ள சிறையிலிருந்து வந்துடுவான் என் கண்ணீருக்கும் போராட்டத்திற்கும் ஒரு முடிவு வந்துடும் என நம்பியிருந்த நேரத்துல ....
அடுக்கி வெச்ச பானைகள் மேல யானை ஏறி மிதிச்ச மாதிரி அற்ப ஓட்டு வாங்கணுங்ம்ங்கற ஒரே காரணத்திற்காக ....
எந்த பொய்ய சொல்லி எம் புள்ளைய உள்ள தள்ளுனாங்களோ அது பொய் இல்ல ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்னோம்ன்னு ஜம்பம் பேசி என் புள்ளையின் விடுதலையை தடுக்க நீ ஒரு காரணமாயிட்டியே சீமானே .....
காங்கிரஸ்காரனும் பாஜக வினரும் எம் புள்ள விடுதலையை தடுக்கும்போது வேதனையா இருந்தது வலிக்கல

ஆனா சீமானே நீ தடுத்த போது பிரசவத்தில் நான் அனுபவித்த வலியைவிட இதயம் நொறுங்கி சுக்குநூறாகி நிக்கற இந்த வலியை பொறுத்துக்க முடியலை ...
நானும் பேரறிவும் எம் புள்ளையோடு சிறையில் கிடக்கிற புள்ளைகளும் உனக்கு என்னய்யா துரோகம் செஞ்சோம் ......சொல் சீமானே
பதிவு..
Pavai Aneefa..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக