திங்கள், 14 அக்டோபர், 2019

நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு

நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு
 மாலைமலர் : சீன அதிபர் ஜின்பிங் காட்மாண்டு: சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நேபாளத்துக்கு சென்றார்.
காட்மாண்டு விமான நிலையத்திற்கு அந்த நாட்டின் அதிபர் வித்யாதேவி பண்டாரி நேரில் வந்து, ஜின்பிங்கை வரவேற்றார். இது குறித்து ஜின்பிங் அவரிடம் கூறுகையில், “நீங்கள் விமான நிலையத்துக்கு வந்து என்னை வரவேற்ற விதம் என்னை ஈர்த்தது” என்று குறிப்பிட்டார். சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நட்பும், ஒத்துழைப்பும் மட்டுமே இருக்கிறது என்று நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி கூறியதை ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டார்.
நேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார். மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி தலைமையிலான தூதுக்குழுவுடனும் சீன அதிபர் ஜின்பிங் பேச்சு நடத்தினார் />

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக