புதன், 30 அக்டோபர், 2019

4 ஐரோப்பிய எம்பிக்கள் திரும்பி சென்றனர் ..ராணுவம் புடைசூழ காஷ்மீர் செல்வதில் பயனில்லை .. அதிருப்தி ..

.hindutamil.in : காஷ்மீர் அழைப்பை ரத்துசெய்து திரும்பிய சில தூதுக்குழு உறுப்பினர்கள்: பாதுகாவல் துணையின்றி மக்களை சந்திக்க விரும்பியதாக தகவல்
uk-member-of-eu-parliament-claims-india-withdrew-invitation-to-visit-kashmir
 நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் டேவிஸ்
இங்கிலாந்தின் மூத்த அரசியல்வாதி ஒருவர், காஷ்மீரை பார்வையிடும் ஐரோப்பிய தூதுக்குழுவிலிருந்து விலகி இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ரத்துசெய்து சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக லண்டன் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது காஷ்மீர் விஜயத்தில் பாதுகாவல் துணையின்றி மக்களை சந்திக்க விருப்பம் என்ற சிறிய விளக்கத்துடன் அவர் இந்தியாவின் அழைப்பை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. அவரைப்போன்று மேலும் 3 பேரும் அவ்வாறே அழைப்பை ரத்துசெய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயத ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளத்தாக்குக்கு ஒரு வெளிநாட்டு தூதுக்குழுவிற்கு இந்தியா அனுமதி அளித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் குழு செவ்வாய்க்கிழமை இரண்டு நாள் பயணத்திற்காக ஸ்ரீநகரை அடைந்தது, இதன் போது அவர்கள் அரசாங்க அதிகாரிகளால் நிலைமை குறித்து விளக்கமளிக்கப்படுவார்கள், மேலும் உள்ளூர் மக்களில் சிலரையும் அவர்கள் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.
திங்களன்று, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர், அப்போது ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வது தங்களுக்கு பலனளிக்கும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்."பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் அரசாங்க முன்னுரிமைகள் குறித்து அவர்களுக்கு தெளிவான பார்வையைத் தருவதைத் தவிர, ஐரோப்பிய தூதுக்குழு பிரதிநிதிகள் விஜயம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் மத வேறுபாட்டைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள உதவும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த அணி முதலில் 27 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, பெரும்பாலும் தீவிர வலதுசாரி அல்லது வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஆனால் நான்கு பேர் காஷ்மீருக்குப் பயணம் செய்யவில்லை, அந்தந்த நாடுகளுக்குத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இங்கிலாந்தின் வடமேற்கில் இருந்து தனது இங்கிலாந்து உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ் டேவிஸ், ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தருமாறு இந்திய அதிகாரிகளால் அழைக்கப்பட்டவர்.
ஆனால், இங்கிலாந்தின் லிபரல் டெமக்ராட் கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு வழங்கப்பட்ட அக்டோபர் 27 முதல் 30 வரையான காஷ்மீர் வருகைக்கான இந்திய அழைப்பை ரத்துசெய்து விட்டு லண்டன் திரும்பியுள்ளார்.
டேவிஸ் தனக்கு வழங்கிய அழைப்புக்கான காஷ்மீர் பயணத்தை ரத்துசெய்வதற்கு முன், ''உள்ளூர் மக்களுடன் சுதந்திரமாக பேச வேண்டும். எங்களுடன் காவல்துறை அல்லது பாதுகாப்புப் படையினர் உடன் வரக் கூடாது. பத்திரிகையாளர்களை விசாரிக்காமல் அழைக்கப்பட வேண்டும்'' என்று சிறிய விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் டேவிஸ் கூறியதாவது:
காஷ்மீரில் இந்திய அரசாங்க நடவடிக்கைகளின் உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது. பத்திரிகைகளின் முழுமையான சுதந்திரத்தைத் தடுப்பதாகவும் இந்த முடிவு காட்டுகிறது.
காஷ்மீரில் ஜனநாயகக் கொள்கைகள் தகர்ந்து வருகின்றன. மேலும் உலகம் இதை கவனமாக கவனிக்கத் தொடங்க வேண்டும்.
காஷ்மீர் குடும்பங்களுடன் தொடர்புகொள்வதில் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள காஷ்மீரி உறவினர்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளது. பத்திரிகையாளர்களுக்கும் வருகை தரும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளூர் மக்களுடன் பேச சுதந்திரமான அணுகுமுறை ஏன் வழங்கப்படவில்லை?
இங்கிலாந்தின் வடமேற்கில் வாழும் காஷ்மீருடன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட ஆயிரக்கணக்கான மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அவர்கள் தங்கள் உறவினர்களிடம் சுதந்திரமாக பேச முடியவும், அவர்களின் குரல்களையாவது கேட்க வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள்,
தூதுக்குழுவினருடன் பாதுகாவல் வருவதை நான் விரும்பவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- பிடிஐ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக