வியாழன், 17 அக்டோபர், 2019

அமெரிக்காவில் இந்தியர் 4 பேரை கொலை செய்துவிட்டு .. பிணத்துடன் போலீசாரிடம் சரணடைந்தார்





indian-origin-man-surrenders-to-the-american-police-with-a-body-confesses-to-4-murdersஅமெரிக்காவில் பிணத்துடன் போலீசாரிடம் சரணடைந்த இந்திய-அமெரிக்கர்: 4 கொலைகள் செய்ததாக வாக்குமூலம் 

 hindutamil.in :வடக்கு கலிபோர்னியாவில் காவல் நிலையம் ஒன்றில் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடையும் விதமாக நபர் ஒருவர் வந்து தான் சில கொலைகள் செய்திருப்பதாகவும் அதில் ஒருவரது பிணம் தன் காரில் இருப்பதாகவும் தெரிவித்ததை முதலில் நம்பவில்லை.
திங்களன்று மவுண்ட் ஷாஸ்டா போலீஸ் துறையின் முன் நண்பகல் 12.10 மணியளவில் நுழைந்த அந்த நபர் ரோஸ்வில்லில் உள்ள தன் வீட்டில் கொலை செய்திருப்பதாக அவர் கூறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர், பிறகு அவரது காரை பரிசோதித்த போது அதில் ஒருவரது பிணமும் இருந்துள்ளது பிறகு வீடு ஒன்றில் இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் பிணம் இருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை நியுயார்க் டைம்ஸ் ஊடகத்துக்கு விவரித்த சார்ஜண்ட் ராபரட் கிப்சன் “என் சர்வீசில் இப்படி நான் பார்த்ததில்லை, ஒருவர் பிணத்துடன் வந்து நான் கொலைகளைச் செய்திருக்கிறேன் என்று கூறியதில்லை” என்றார்.

இந்நிலையில் செவ்வாயன்று அந்த நபர் யார் என்று போலீஸார் அடையாளம் கண்டனர். அவர் பெயர் ஷங்கர் ஹாங்குட், இந்திய-அமெரிக்கர், பலநாட்களாக தன் உறவினர்களையே அவர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கிப்சன் நியூயார்க் டைம்ஸில் கூறும்போது, ஷங்கர் ஹாங்குட் மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் இருந்தார். ஏன் அந்தக் கொலைகளைச் செய்தார் என்று அவர் கூறவில்லை, எப்படிக் கொலை செய்தார் என்பதை போலீசார் கூற மறுத்தனர்.
தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார், அவர் மீது 4 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் இவர் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம் என்றும் இதனால் மனிதவிரோதக் கொலை என்ற சமூக அச்சுறுத்தல் இல்லை என்று போலீஸார் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக