புதன், 16 அக்டோபர், 2019

லலிதா ஜுவல்லேர்ஸ் 25 கிலோ நகைகள் மீட்பு

 திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்:  25 கிலோ நகைகள் மீட்பு - காவல் ஆணையர் அமல்ராஜ்  பேட்டி தினத்தந்தி :  திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: 25 கிலோ நகைகள் மீட்பு - காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி திருச்சியில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
 திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருச்சியில் பிரபல  நகைக் கடையில் நடைபெற்ற 28 கிலோ நகைகள் திருட்டு சம்பவத்தில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனை விசாரிக்க அனுமதி கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடை கொள்ளையில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர். 
இந்த வழக்கில் விசாரணை நடத்த பெங்களூரு காவல்துறையினரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முருகனை விசாரித்த பிறகே நகைகள் முழுவதும் மீட்கப்படும். திருச்சி நகைக்கடை  கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இன்னும் மீட்கப்பட வேண்டிய நகைகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக