செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஆந்திரா - ஒரேநாளில் 1.26 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஜெகன்மோகன்

appointments கன்மோகன் -கலிலுல்லா.ச - vikatan.com :   தேர்ச்சிபெற்ற
1,26,728 பேருக்கு பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிராமங்களில் கிராம செயலகத்தையும், நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்குகிறது. அதன்படி, இந்தச் செயலகங்களில் 500 வகையான பொது சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலம் ஆகியவை தொடர்பான சேவைகளும் நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு 21 லட்சம் பேர் பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் 19.50 லட்சம் பேர் செப்டம்பர் 1 முதல் 8-ம் தேதிவரை நடைபெற்ற எழுத்துத்தேர்வில் கலந்துகொண்டனர். அவர்களில் 1,98,164 பேர் தேர்வில் தகுதி பெற்றனர். இதில் 1,26,728 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் நகர்ப்புறங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் 31,640 பேர். இந்த நிலையில், தேர்ச்சிபெற்ற 1,26,728 பேருக்கும் பணிநியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டன.



விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாநிலம் முழுவதும், கிராம மற்றும் நகர்ப்புற வார்டு செயலகங்கள் டிசம்பர் முதல் வாரத்திலிருந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா முழுவதும் 11,158 கிராம செயலகங்களும், 3,786 வார்டு செயலகங்களும் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு செயலகத்திலும் 10 முதல் 12 ஊழியர்கள் இருப்பார்கள். மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனைக்காக ஒரு பெண் போலீஸும், பெண்கள் நல உதவியாளரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ``இது நம் நாட்டு வரலாற்றில் பொன்னான எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. இதற்கு முன்னர் இதுபோல ஒரே நேரத்தில் பல நிரந்தர அரசு ஊழியர்கள் நியமனம் என்பது நாட்டில் எங்கும் நடைபெறவில்லை. இவர்கள் அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன் பதிவு செய்தவர்கள். ஊழல் இல்லாமல் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை ஒரு வேலையாக மட்டும் கருதாமல், சேவையாக கருத வேண்டும். இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது தணிக்கை செய்யப்படும். அதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்” என்றார்
>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக