ஞாயிறு, 13 அக்டோபர், 2019

லலிதா ஜுவலர்ஸ்... பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய விபரங்கள்

வேங்கூர் வாடகை வீடுமுருகன்பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை ?
விகடன் -ி.ய.ஆனந்தகுமார்:
சசிகலா பாணியில் முருகனை சட்டவிரோதமாக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் கர்நாடக மாநில போலீஸார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை தொடர்புடைய முக்கிய குற்றவாளி முருகன் நேற்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிட்டி சிவில் 11வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனை 15 நாள் நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்க நீதித்துறை நடுவர் நாகம்மா மகாதேவ இச்சாந்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் கர்நாடக போலீஸார் முருகனுடன் வந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைத் தோண்டி எடுத்ததாகக் கூறப்பட்டது. இதனால் காலையில் இருந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸார் பரபரப்பாகவே இருந்தனர்.

மேலும் கர்நாடக போலீஸார், லோக்கல் போலீஸார் அனுமதி மற்றும் பூமிக்கு அடியில் புதைத்த பொருளை எடுக்க லோக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்படியிருக்க, கர்நாடக மாநில போலீஸார் லோக்கல் போலீஸாருக்கு தகவல் கொடுக்காமல், கடந்த சில மாதங்களாக திருச்சியில் முருகன் தங்கியிருந்ததாக சொல்லப்படும் திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்று, பூட்டை உடைத்து அங்கிருந்து 12 கிலோ தங்க நகைகளை அள்ளிச் செல்வதாக, திருச்சி எஸ்.பி தனிப்படைக்கு வந்த தகவலின் பேரில், திருச்சி மண்டல போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். அதன்படி கர்நாடக பதிவு எண் கொண்ட கார்களில், பெரம்பலூர் அடுத்த கிருஸ்ணாபுரம் வழியே பெங்களூர் நோக்கி சென்ற கார்களை பெரம்பலூர் போலீஸார் மடக்கி பிடித்தனர். அப்போது முருகன், ஒரு இன்னோவா காரின் டிக்கியில் மறைந்திருந்தார். மேலும் அவர்கள் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தனர்.
அடுத்து அவர்களை பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் திருச்சி தனிப்படை அதிகாரி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.
தோண்டி எடுக்கப்பட்ட நகைகள் எவ்வளவு எனப் போலீஸார் எடை போட்டு வருகிறார்கள். மொத்தத்தில் அதில் 12 கிலோ தங்க நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் ஆயுதப்படை மைதானத்துக்குள் வெளியாட்களை உள்ளே அனுமதிக்காத போலீஸார், பத்திரிகையாளர்களை வெளியே தடுத்து நிறுத்தினர்.
திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி 15 நாள்கள் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் முருகனை கர்நாடக போலீஸார் திருச்சி அழைத்துவந்தது, நேற்று இரவு தங்க வைத்திருந்ததுடன், காலை நகைகளை தோண்டி எடுத்தது எப்படி… கர்நாடக போலீஸார் முருகனை போலீஸ் கஸ்டடி எடுக்க அனுமதி வாங்கினார்களா… இல்லை சட்டத்துக்கு விரோதமாக அழைத்து வந்தார்களா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை தொடர்கிறது. ஏற்கெனவே பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா சட்டவிரோதமாக வெளியில் வந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், முருகனை திருச்சி அழைத்து வந்த கர்நாடக போலீஸார் நகைகளைத் தோண்டி எடுத்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளையில் முருகனுக்குத் தொடர்பிருக்கிறது என்கிற தகவல் வெளியானதிலிருந்து பெங்களூரு போலீஸார் தமிழ்நாட்டிலும் திருச்சி தனிப்படை போலீஸார் பெங்களூரிலும் முகாமிட்டு இருந்தார்கள். நேற்று முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும் லாவகமாக அவரை அழைத்து வந்து, புதைத்து வைத்திருந்த நகைகளை கர்நாடக போலீஸார் தோண்டி எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ளே நடப்பது எதுவும் வெளியே தெரியாமல் போலீஸார் ரகசியம் காப்பதால் பரபரப்பு தொடர்ந்தது.
இந்நிலையில், “நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை பெங்களுரூ பொம்மனஹள்ளி காவல் நிலைய குற்ற எண்.238/19 வழக்கில் காவல் ஆய்வாளர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை 6 நாட்கள் போலீஸ் காவல் எடுத்துள்ளதாகவும், அதன்படி ஆய்வாளர் ஆளிநர்களுடன் இன்று காலை திருச்சி வந்து, திருச்சி மாநகர காவல்துறை தனிப்படையுடன் சேர்ந்து குற்றவாளி முருகன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருச்சி லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட சுமார் ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியதாகவும், அந்த நகைகளை பெங்களுரூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்” என திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். vikatan.com<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக