வியாழன், 19 செப்டம்பர், 2019

Cafe Coffee day ரூ.2,700 கோடிக்கு சொத்தை விற்கிறது காஃபி டே

Coffee day vikatan :  மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த கடன் விவரத்தில், மொத்தம் 4,970 கோடி ரூபாய் கடன் இருக்கிறது எனக் காஃபி டே தெரிவித்திருந்தது. பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் பயிற்சியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வி.ஜி.சித்தார்த்தா, காஃபி டே நிறுவனத்தைத் தொடங்கி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்டார். கடன் சுமை காரணமாக சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. காஃபி டே நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் கடன் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பீடு செய்தனர். சித்தார்த்தா தற்கொலைக்குப் பிறகு, கடுமையான கடன் சுமையில் நிறுவனம் தத்தளித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த கடன் விவரத்தில், மொத்தம் 4,970 கோடி ரூபாய் கடன் இருக்கிறது.
அதில் ரூ.4,796 கோடி பாதுகாப்பான பிணையக் கடன் பெற்றிருப்பதாகவும் ரூ.174 கோடி பிணையம் இல்லாமல் வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. காஃபி டே குழுமத்துக்குச் சொந்தமான 9 ஏக்கர் பரப்பில் உள்ள குளோபல் வில்லேஜ் டெக்னாலஜி பார்க்கை விற்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் காஃபி டே நிறுவனத்தின் கடன் சுமை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
குளோபல் வில்லேஜ் டெக்னாலஜி பார்க் என்ற தொழில்நுட்பப் பூங்காவை 2,500 முதல் 3,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைள் நடந்து வருகின்றன. தற்போது 2,700 கோடிக்கு குளோபல் வில்லேஜ் டெக்னாலஜி பார்க்கை விற்பது குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. பிளாக்ஸ்டோன், சலர்புரியா சத்வா ஆகிய நிறுவனங்கள் அதனை வாங்க உள்ளன. பிளாக்ஸ்டோன் நிறுவனம் 80 சதவிகிதப் பங்குகளையும் சலர்புரியா சத்வா 20 சதவிகித பங்குகளையும் வாங்கவுள்ளன.


Coffee day


Coffee day
ஒப்பந்தப்படி 2,000 கோடி ரூபாய் இந்த வாரத்தில் கைமாறுகிறது. மீதமுள்ள 700 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு தருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன்முலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பாதி அளவு கடனை காஃபி டே செலுத்திவிடும். இதன்மூலம் காஃபி டே நிறுவனத்தின் கடன் 2,400 கோடி ரூபாயாக குறையும் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக