சனி, 21 செப்டம்பர், 2019

சென்னை பெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... அரிவாள்வெட்டு .. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்

மூளை tamil.oneindia.com - hemavandhana.: பெண்ணின் உடையை கிழித்த ரவுடி, கொந்தளித்த 2 பேர்.. சரமாரி அரிவாள் வெட்டு! சென்னை: பெண்ணின் டிரஸ்ஸை ரவுடி அறிவழகன் கிழித்துவிட்டாராம்..
இந்த ஆத்திரத்தில்.. சாப்பிட்டு கொண்டே இருந்த அறிவழகனின் தலை, கை, கால், முகத்தினை 2 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து, மூளையை தனியே எடுத்து ஒரு தட்டில் வைத்து தப்பியும் விட்டது.
திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அறிவழகன். 24 வயதாகிறது.
இவர் ஒரு ரவுடி. கொலை வழக்கு கூட இவர்மீது பதியப்பட்டு உள்ளது. ரவுடி பல்புகுமாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியே இந்த அறிவழகன்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி இருக்கும். அறிவழகன் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, 2 பேர் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் கையில் அரிவாள் உள்ளிட்டவைகளை பார்த்ததும், அறிவழகன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அந்த 2 பேரும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர்.


இதில் அறிவழகனின் கை, கால்கள், தலை, முகம் என எல்லா இடங்களிலுமே அரிவாள் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
அறிவழகனின் மூளை பகுதியை வெட்டி எடுத்த அந்த கும்பல் அதை ஒரு தட்டில் வைத்துவிட்டு தப்பி சென்றது. பெற்றவர்களின் கண்முன்னேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து அண்ணாசதுக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான் இது முன்விரோதத்தில் நடந்த கொலை என்பது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அறிவழகனுக்கு ஒரு பெண்ணுடன் தகராறு வந்துள்ளது. அப்போது, அந்த பெண்ணின் டிரஸ்ஸை அறிவழகன் கிழித்துவிட்டாராம். இதனால் அந்த பெண்ணின் மகன்களுக்கும், அறிவழகனுக்கும் அடிக்கடி தகராறு இருந்து கொண்டே வந்துள்ளது. அதனால்தான் இந்த கொலையும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. இதில் ஒருவர் பல்பு குமாரின் தம்பி சொரி விஜய் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தப்பிச் சென்ற அந்த 2 பேரையும் பிடிக்க ஒரு தனிப்படையை போலீசார் அமைத்து தேடி வருகின்றனர். ரவுடியை கொலை காரணமாக மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவுவதால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக