செவ்வாய், 3 செப்டம்பர், 2019

தமிழிசை சவுந்தரராஜனின் ஊடக வீக்கம் .. காரணம் என்ன? கதை என்ன?

LRJ : அப்பாவின் அரசியல் செல்வாக்கால் மருத்துவராகி தான் பிறக்க நேர்ந்த
செல்வமும் எண்ணிக்கை பலமும் கொண்ட ஜாதிச்செல்வாக்கால் அரசியல் பதவிகளை அடைந்த ஒருவரை, அந்த இரண்டையும் கழித்துவிட்டு ஏதோ உழைப்பால் உயர்ந்த உன்னதத்தலைவி, உதாரண புருஷி என்று ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கொண்டாடிக்கொண்டிருப்பதை காண குமட்டிக்கொண்டிருக்கிறது?
அதிலும் வாரிசு அரசியலை எதிர்ப்பதாகவும் ஜாதிச்சங்க அரசியலை எதிர்ப்பதாகவும் மதவாத அரசியலை முழுமையாய் எதிர்ப்பதாகவும் முழங்கோ முழங்கென முழ நீளத்துக்கு முழங்கும் முற்போககுகள், நடுநிலைகள், ஊடகங்கள் அடிக்கும் ஜால்ரா சத்தம் காதை செவிடாக்குகிறது. இந்த மூன்றையும் கழித்துவிட்டால் தமிழிசையின் தனித்திறன் என்ன?
பெத்த பூஜ்ஜியம் தானே.
இதையெல்லாம் பார்க்க வளர்மதிகளின், சி ஆர் சரஸ்வதிகளின் அரசியல் வளர்ச்சி ஆயிரம் மடங்கு பரவாயில்லை.
;அரசியலில் அவர்களின் இடங்கள் என்பது அவரவர் உழைப்பினால் மட்டுமே கிடைத்தவை. அப்பன்களாலோ ஜாதிச்செல்வாக்காலோ கிடைத்தவை அல்ல.
அடிப்படையில் கோழையான கொடுங்கோலி ஜெயலலிதாவை தைரியலட்சுமியாக்கின அத்தனை பேரும் இப்போது தமிழிசைக்கு உழைப்பால் உயர்ந்த உன்னதர் பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கெரகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக