செவ்வாய், 10 செப்டம்பர், 2019

உலகில் யாராவது லஞ்சத்தை காசோலையாக வாங்குவார்களா? சிதம்பரம் விவகாரத்தில் உள்ள குளறுபடிகள்

Vijay Ramdoss : 2007 ஆம் ஆண்டு INX Media என்ற நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு மேம்பாடு ஆணையத்திடம் அனுமதி பெற்றுத் தர திரு. கார்த்தி சிதம்பரம்
லஞ்சம் வாங்கினார் என்பது தான் குற்றச்சாட்டு. லஞ்சம் பெற்றத்தாக கூறப்படும் தொகை பத்து லட்சம் , அதுவும் காசோலையாக! உலகில் யாராவது லஞ்சத்தை காசோலையாக வாங்குவார்களா? அந்த காசோலையும் Advantage Strategic Consulting என்ற நிறுவனத்துக்கு INX Media வழங்கியிருக்கிறது. நேரடியாக திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் வங்கி கணக்குக்கு பணம் செல்லவில்லை. இந்த ASC நிறுவனத்தில் திரு.கார்த்தி சிதம்பரம் பங்குதாரர் கூட இல்லை. ASC அவருடைய நண்பரின் நிறுவனம் மட்டுமே. சட்டவிரோத பணப்பபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் 30 லட்சத்துக்கு மேல் பணம் பரிமாற்றம் நடந்தால் மட்டுமே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த வழக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் தொகை பத்து லட்சம் மட்டுமே. முதலில் இதை வழக்கு என்று சொல்வதே தவறு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் மட்டுமே வழக்கு என்று சொல்ல முடியும். இதில் FIR மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை.

FIRல் திரு. ப சிதம்பரத்தின் பெயர் இல்லை. தன்னுடைய சொந்த மகளை கொன்றதற்காக தண்டனை பெற்று மும்பை பைகுலா ஜெயிலில் இருக்கும் இந்திராணி முகர்ஜி என்பவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து திரு. ப சிதம்பரம் அவர்களை சிபிஐ முதலில் கைது செய்தது. இதே INX Media நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் முறைகேடு பற்றி 2008ல் நிதியமைச்சராக இருந்த திரு.ப சிதம்பரம் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
[ https://www.outlookindia.com/…/muddy-waters-flow-th…/295193… ]
இந்த விவகாரத்தில் தான் கடந்த ஆண்டு திரு. கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆர்.எஸ். கார்க் தன்னுடைய தீர்ப்பில் ஐம்பதாவது பத்தியில் " கார்த்தி சிதம்பரம் தங்களை சந்தித்ததாக அன்று அந்நிய முதலீடு மேம்பாடு ஆணையத்தில் இருந்த எந்த அதிகாரிகளும் விசாரணையில் கூறவில்லை " என்று தெளிவாக குறிப்பிட்டு ஜாமீன் வழங்கினார்.
அந்நிய முதலீடு மேம்பாடு ஆனையம் இப்போது இல்லை. அது மோடி ஆட்சிக்கு வந்த பின் 2017 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு விட்டது. அந்நிய முதலீடு மேம்பாடு ஆணையம் என்பது மத்திய வர்த்தகத்துறை ( commerce ministry) , வெளியுறவுத்துறை ( External affairs) , பொருளாதார விவகாரங்கள் துறை ( Department of Economic affairs) மற்றும் Department of Industrial Policy and promotion இந்த நான்கு துறைகளிலும் இருக்கும் மூத்த அதிகாரிகள் கொண்ட அமைப்பு. அந்நிய முதலீட்டிற்கு ஒப்புதல் பெற சமர்பிக்கப்படும் மனுக்களை இந்த நான்கு அதிகாரிகளும் ஆராய்ந்த பிறகு அது மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நிதித்துறை செயலர் மீண்டும் ஒருமுறை மனுவை ஆராய்ந்த பிறகு அது நிதியமைச்சரிடம் போகும் பிறகு நிதியமைச்சர் ஒப்புதல் வழங்குவார். இது தான் நடைமுறை.
சரி. இதில் தவறு நடந்திருக்கிறது என்று வைத்து கொள்வோம். அப்படியானால் ஏன் ஒரு அதிகாரிகளை கூட கைது செய்ய வில்லை? விதிமுறைகளை மீறி அன்றைய நிதியமைச்சர் ஒப்புதல் வழங்கியிருந்தால் அந்த கோப்புகளை அவரிடம் அனுப்பிய அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
உதாரணத்துக்கு ஒரு பாலம் கட்டியதில் முறைகேடு நடந்தால் அதை கட்டிய பொறியாளர், அந்த ஒப்பந்ததாரர், ஒப்புதல் அளித்த அதிகாரி, பிறகு பொதுப்பணித்துறை செயலர், கடைசியாக பொதுப்பணித்துறை அமைச்சர், இப்படி தான் நடவடிக்கை பாயும். ஆனால் ப சிதம்பரம் மட்டும் கைது செய்யப்படுகிறார் அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை?
உச்சநீதிமன்றத்தில் திரு. ப சிதம்ரம் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்கு மட்டும் நான்கு நாட்கள் வாதம் நடந்தது. திரு. ப சிதம்பரம் அவர்களுக்கு ஆதரவாக வாதாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.கபில் சிபில் திறந்த நீதிமன்றத்தில் , திரு ப சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் ஒரே ஒரு சொத்து அல்லது வங்கி கணக்கை மட்டும் காட்டுங்கள் நாங்கள் வழக்கை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று சொன்னார். இது நாள் வரை சிபிஐ யோ அமலாக்கத்துறையோ அவர் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் சொத்தையோ அல்லது வங்கி கணக்கையோ காட்டவில்லை.
திரு. ப சிதம்பரமும், திரு. கார்த்தி சிதம்பரமும் நாடாளுமன்ற , மாநிலங்களவை உறுப்பினர்கள். அவர்கள் சொத்துக்கள் பற்றிய அனைத்து தகவல்களும் அவர்கள் தேர்தலில் மனு தாக்கல் செய்த போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து இருப்பார்கள். அதில் குறிப்பிடாத சொத்துக்கள் பற்றிய ஆதாரங்கள் உண்மையில் பா.ஜ.க விடம் இருக்குமேயானால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய முறையிடலாமே. ஏன் இன்னும் செய்யவில்லை?
ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவில் திரு ப சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் கடந்த வாரம் திகார் சிறைக்கு அவர் அனுப்பட்டது வரை அதை கொண்டாடியவர்களை பார்த்த போது தான் தெரிந்தது மனிதர் இந்திய அரசியலில் எவ்வளவு பெரிய அசைக்க முடியாத ஆளுமையாக இருக்கிறார் என்று. திகார் சிறைக்கு செல்லும் முன் கூட " I am worried only about the economy " என்று தான் சொன்னார்.
இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் டாக்டர். மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறகு திரு.ப சிதம்பரம் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பார்ப்பனர்களால் ஒரு காலமும் ப சிதம்பரத்தை போல் ஒரு ஆளுமையை உருவாக்க முடியாது. அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் சுப்பிரமணியன் சாமிகளும், குரு மூர்த்திகளும் தான். ப சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் ஆகப் பெரிய சொத்து. இந்த கைதின் மூலம் அவருடைய புகழுக்கு ஒரு நாளும் பா.ஜ.கவால் களங்கம் விளைவிக்க முடியாது.
அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது தீவிரவாதம் பற்றி பாக்கிஸ்தானின் நிலைபாடு பற்றி ஒரு நிகழ்ச்சியில் இப்படி சொன்னார்
" Let's see that How long you can say like this , This is my stand. I stand here and I will not go from this place. How does it helps the situation? Time will teach you a good lesson "
இது மோடி - அமித்ஷாவுக்கு முற்றிலும் பொருந்தும். ஆம் Time will teach them a good lesson.
- விஜய் ராம்தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக