மின்னம்பலம் :
2019 ஆஸ்கர் விருதுகளுக்கான 28 படங்கள் அடங்கிய இந்தியத் தேர்வு பட்டியலில், மூன்று தமிழ்ப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு (Film Federation of India) ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக ‘கல்லி பாய்’ திரைப்படத்தைத் தேர்வு செய்துள்ளது. மொத்தம் 28 திரைப்படங்கள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை உட்பட) இந்தப் பட்டியலில் இருந்தன. இதில், பதாய் ஹோ, அந்தாதுன், ஆர்டிக்கள் 15, யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பத்லா, கேசரி மற்றும் இன்னும் சில இந்தித் திரைப்படங்கள் அடங்கியிருந்தன.
தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய திரைப்படங்கள் பரீசலனையில் இருந்தன.
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விருதுகளில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்குச் சிறந்த நடிப்புக்கான விருது கிடைத்தது. மேலும், பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் கவனம் பெற்றது. வெற்றி மாறனின் விசாரணை திரைப்படம் 2016ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையினால், தமிழ்ப் படங்கள் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கல்லி பாய் திரைப்படத்தைத் தேர்வு செய்த ஜூரி கமிட்டியின் தலைவரும் பிரபல இயக்குநருமான அபர்ணா சென் நேற்று (செப்டம்பர் 22) கூறும்போது, "கல்லி பாய் படத்தின் ஆற்றல் பரவக்கூடியது. இந்தப் படம் பார்வையாளர்களிடம் பேசும்" எனக் கூறினார்.
கல்லி திரைப்படத்தைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினரை சமூக வலைதளங்களில் திரைப்பட ஆர்வலர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதே சமயம், இன்னும் பலர் இந்தியாவுக்கான ஆஸ்கர் சினிமாவாக கல்லி பாய் தேர்வு செய்யப்பட்டதற்காக தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் டீலக்ஸ் என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம். ஆனால், அந்தப் படம்கூட போதுமானதாக இல்லை போலும்...” என கல்லி பாய் திரைப்படத்தைத் தேர்வு செய்ததற்கு மறைமுகமாகத் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், பெரும்பான்மையானவர்கள் ‘ஆர்டிக்கள் 15’ ஏன் தேர்வு செய்யப்படவில்லை என விவாதத்தைத் தொடங்கியுள்ளனர். ‘நாட்டில் நிலவி வரும் சாதிய கொடுமைகளை, பிற்படுத்தப்பட்டோருக்கான அநீதிகளை பேசிய படமது’ எனத் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இது தவிர பார்வதி நடித்த ‘உயரே’, டோவினோ தாமஸ் நடித்த ‘அன்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ’, ஷாஜி என்.கருன் இயக்கிய ‘ஒலு’ ஆகிய மூன்று மலையாளத் திரைப்படங்கள் இந்தப் பட்டியலில் இருந்தன. கன்னடத்தில் தர்ஷன், அர்ஜுன் நடித்த ‘குருஷேத்ரா’, தெலுங்கில் விஜய் தேவர கொண்டா நடித்த ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக