செவ்வாய், 10 செப்டம்பர், 2019

புலிகளுக்கு எம்ஜியார் வீசிய .. பாதாள அறையில் கோடிகோடியாக பணக்கட்டுகள் .. எப்படி எம்ஜியாரிடம் அவ்வளவு பணம்?

பரங்கிமலையிலுள்ள எம் ஜி ஆர் அவர்களின் வீட்டிற்கு சென்றோம். ரகு என்ற போராளி வாகனத்தை ஓட்டி வந்தார் எம்மை எதிர்பார்த்தபடி அந்த பங்களாவின் முன் வாசலில் எமக்காக காத்து நின்றார் முதல்வர். வாகனத்தை வீட்டிற்கு ஓரமாக நிறுத்தும் படி சொல்லி விட்டு என்னை மட்டும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். யார் அந்த பையன்? என்று கேட்டார். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் ஒரு விடுதலைப் போராளி என்றேன். வீட்டிற்குள் ஒரு லிப்ட் இருந்தது அதை திறந்து உள்ளே வர அழைத்தார். பாதாளம் வரை ஓரு தளத்திற்கு கொண்டு சென்று அது திறந்து கொண்டது. அங்கு விரிந்து நின்ற அகன்ற ஒரு அறை நிறைய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக நிறைய பத்து அடி உயரம் வரை அடுக்கப் பட்டு இருந்தன அது ஒரு #பாதாளபண அறை அந்த அறைக்குள் இரண்டு காவலாளிகள் ஓரமாக ஒதுங்கி நின்றனர் அவர்களிடம் இரு விரல்களை காட்டி மலையாள மொழியில் ஏதோ சொன்னார். பத்து பெட்டிகள் வரை எடுத்து வந்து லிப்டிற்குள் அடுக்கினார்கள்ன
வளன்பிச்சைவளன் : ஈழப்போரும் தமிழக ஈழத்தமிழர்களின் பொறுப்பும்
கடமையும் ! எம்ஜிஆரின் பாதாள பண அறை
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது விடுதலை எனும் நூலில் இருந்து
தமிழ் நாட்டில் நமக்கு நாமே பயிற்சி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம் ஆனால் போராளிகளுக்கு இராணுவ பயிற்சி அளித்து அவர்களுக்கு ஆயதம் தரிக்க விரும்புகிறோம். இந்த திட்டத்திற்கு பண உதவி செய்வீர்களா? அப்படி உதவினால் அது எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும் அந்த உதவிக்காக எமது மக்கள் என்றுமே நன்றி உடையவர்களாக இருப்பார்கள் என்றேன்.
"" அது சரி என்னிடம் இருந்து எவ்வளவு பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்? "என்று கேட்டார் எம் ஜி ஆர் மிகவும் சங்கடமான கேள்வி என்ன சொல்வதென்று
தெரியாது தடுமாறிய படி பெரிய தொகை தேவைப்படும் என்று இழுத்தேன். அது சரி எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள் என்று மீண்டும் கேட்டார் நான் சங்கடப்படுவதை கண்ட கேர்ணல் சங்கர் குறைந்தது இரண்டு கோடியாவது தேவைப்படும் ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சி அளிக்க ஒரு கோடியும் அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியாக இரண்டு கோடி தேவைப்படும் என்று சொன்னார்.

ஆக இரண்டு கோடிதானா? நாளைக்கே கொடுத்து விடுகிறேன் என்று கூறிய முதலமைச்சர் என்னை சுட்டிக் காட்டி மறுநாள் இரவு 10 மணியளவில் ஒரு வாகனத்துடன் தனது வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நாம் வாயடைத்து போனோம் அந்த நேரத்தில் இரண்டு கோடி இந்திய ரூபாய் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத தொகை அப்பொழுது எமக்கு பயங்கரமான பணப் பிரச்சனை வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த வாழ்ந்து வந்த ஆதரவாளர்களிடம் இருந்து சிறு தொகை பணத்தில் தான் மிகச் சிரமத்துடன் எமது இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது இப்படியான எம் ஜி ஆர் உருவத்தில் அதிர்ஷ்ட தேவதை எம்மீது கருணை காட்டுவார்களென எதிர்பார்க்க வில்லை எம் ஜி ஆர் புகழ்பாடி விரைவில் தலைவர் பிரபாகரனுடன் வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வெளியே வந்ததும் இன்னும் கூடுதலாக கேட்டு இருந்தால் கொடுத்து இருப்பாரோ? என்று கேர்ணல் சங்கரிடம் கேட்டேன். முதலில் இந்த தொகை கிடைப்பதே பெரிய காரியம் தேவைப் பட்டால் பிறகு உதவி கேட்கலாம் தானே. என்றார் சங்கர்

அவர் சொன்னது சரியாகப் பட்டது. தலைவர் பிரபாகரனிடம் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்த போது அவர் முதலில் நம்ப மறுத்து விட்டார். கேலி செய்கிறோம் என்று எண்ணினார் போலும் பின்பு முழு விபரத்தையும் கூறினோம். மிகவும் பூரிப்படைந்த பிரபாகரன் சில தினங்களில் எம் ஜி ஆர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதாக சொன்னார்.

எம்ஜியாரின்பாதாளபணஅறை
மறுநாள் இரவு சரியாக 10 மணியளவில் ஒரு கயஸ்வரன் வண்டியுடன் பரங்கிமலையிலுள்ள எம் ஜி ஆர் அவர்களின் வீட்டிற்கு சென்றோம். ரகு என்ற போராளி வாகனத்தை ஓட்டி வந்தார் எம்மை எதிர்பார்த்தபடி அந்த பங்களாவின் முன் வாசலில் எமக்காக காத்து நின்றார் முதல்வர். வாகனத்தை வீட்டிற்கு ஓரமாக நிறுத்தும் படி சொல்லி விட்டு என்னை மட்டும் வீட்டிற்குள் அழைத்து சென்றார். யார் அந்த பையன்? என்று கேட்டார். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் ஒரு விடுதலைப் போராளி என்றேன். வீட்டிற்குள் ஒரு லிப்ட் இருந்தது அதை திறந்து உள்ளே வர அழைத்தார். பாதாளம் வரை ஓரு தளத்திற்கு கொண்டு சென்று அது திறந்து கொண்டது. அங்கு விரிந்து நின்ற அகன்ற ஒரு அறை நிறைய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக நிறைய பத்து அடி உயரம் வரை அடுக்கப் பட்டு இருந்தன அது ஒரு #பாதாளபணஅறைன

தமிழர்கள் தமிழ்நாட்டை எம்ஜியாரை நம்பி ஒப்படைத்தனர்
#எம்ஜியார் பாதாளபண அறையை மலையாளிகளையே நம்பி காவலுக்கு வைத்தார்

அந்த அறைக்குள் இரண்டு காவலாளிகள் ஓரமாக ஒதுங்கி நின்றனர் அவர்களிடம் இரு விரல்களை காட்டி #மலையாளமொழியில் ஏதோ சொன்னார். பத்து பெட்டிகள் வரை எடுத்து வந்து லிப்டிற்குள் அடுக்கினார்கள் பின்பு வெளியே வந்ததும் பெட்டிகள் எங்கள் வாகனத்தில் அடுக்கப் பட்டன.
அந்த நள்ளிரவில் கோடிக்கணக்கான பணத்துடன் சென்னை நகரம் ஊடாக திருவான்மியூரிலுள்ள எமது வீட்டிற்கு செல்வதில் சிக்கல்கள் எழலாம். சில சமயம் காவல் துறையினர் மறித்து சோதனையிட்டாலும் பிரச்சினை எழலாம்
என்று எம் ஜி ஆரிடம் விசயத்தை கூறினோம் எமக்கு பாதுகாப்பிற்கு ஒழுங்கு செய்வதாக கூறிவிட்டு யாரிடமோ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒரு சில நிமிடங்களில் இரு ஜீப் வண்டியில் ஆயுதம் தரித்த காவல் துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர் முன்பாக ஒரு ஜீப் வண்டியும் பின்னால் ஒரு ஜீப் வண்டியுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் புடை சூழ நானும் ரகுவும் இரண்டு கோடி ரூபா அடங்கிய பெட்டிகளும் சென்றோம் சென்னை நகர வீதிகளூடாக பவனி சென்று திருவான்மியூரை அடைந்தோம் எனது வீட்டில் தலைவர் பிரபாகரனும் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியும், கேர்ணல் சங்கர் மற்றும் சில போராளிகள் எமக்காக காத்திருந்தனர். எமது இருப்பிடம் வந்த உடன் காவல் துறையினர் விடை பெற்றுச் சென்றனர். எனது படுக்கை அறைக்கு பணப்பெட்டிகள் வீட்டின் மேல் மாடிக்கு எடுத்து செல்லப் பட்டன ஒவ்வொரு பெட்டியாக திறந்து நூறு ரூபா நோட்டுகள் அடங்கிய கட்டுக்களை எடுத்து அடுக்கி எண்ணி முடிக்க விடிந்தது விட்டது.

#புலிகளின்விமர்சிக்கப்படவேண்டியதவறுகள்
எம்ஜிஆர் என்றும் தமிழீழத்தை ஆதரித்தது இல்லை அதிமுக வின் செயற்குழு, பொதுக் குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வில் ஆனால் பணத்தை கொடுத்து ஈழப்போராட்டத்தின் காவல்தெய்வம் என்ற பட்டத்தை விலை கொடுத்து வாங்கிய இரட்டை வேடதாரி எம்ஜிஆர். அன்று திமுக தலைவர் கருணாநிதி தமிழீழத்திற்கு ஆதரவாய் மிகத்தீவிரமாய் பட்டிதொட்டி எங்கும் போய் சேருமளவுக்கு தமிழீழமே தீர்வு என தீவிர பரப்புரை போராட்டங்கள் என இயங்கிய பொழுது எம் ஜி ஆர் எந்த ஒரு பணியும் செய்யாமல் விடுதலைப் புலிகளை அழைத்து இரண்டு கோடி பணம் கொடுத்ததன் மூலம் விடுதலைப் புலிகளால் ஈழ விடுதலைப் போரட்டத்தின் காவல் தெய்வமாக சித்தரிக்க ப் பட்டார். பணம் பெற்ற புலிகள் எம் ஜி ஆருக்கு நன்றி சொல்வது அவர்களின் தனி உரிமை ஆனால் தமிழீழத்தை ஆதரிக்காதவரை ஈழ விடுதலை நாயகன் என தமிழ்நாட்டு அரசியலில் பரப்புரை செய்தது தமிழக தமிழர்கள் கொடுத்த ஏகோபித்த ஆதரவிற்கு பணம் கொடுத்தார் என்பதற்காக ஒரு இரட்டை வேடதாரியை விடுதலை காவல் தெய்வம் என சித்தரித்தது மன்னிக்க முடியாத குற்றமே.

#எம்ஜிஆரசொந்தபணத்தைகொடுத்தார்
பாலசிங்கம் குறிப்பிடுகிறார் எம்ஜிஆரின் பாதள பண அறை விசாலமானது என்றும் அதில் அறை முழுவதும் பத்தடி உயரத்திற்கு பணம் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது அவரின் கணக்குப்படி ஆயிரம் கோடி ரூபாய் கள் இருக்கலாம்.
எம் ஜி ஆர் திரை உலகில் நடிப்பதை விட்டு வந்தது 1978 ல் அப்போது அவர் வாங்கிய சம்பளம் பத்து லட்சம் அதுவும் 1960 களுக்கு பிறகு இந்த 17 ஆண்டுகளில் 30 படம் என வைத்து கொண்டால் கூட 3 கோடி ரூபாய் வருமானம் இதில் செலவுகள் போக எவ்வளவு மீதம் இருக்கும் நிலைமை இவ்வாறிருக்க அவர் பாதாள பண அறையில் எப்படி ஆயிரம் கோடி பணம் வந்தது? முதலமைச்சர் பதவியை தவறாக பயன் படுத்தி பெற்ற தவறான பணம் தானே. இந்த பணத்தை கொடுத்தவரை, தமிழ்மக்கள் வரிப்பணத்தை தவறான வழியில் ஈட்டிய ஒருவர் தங்களுக்கு பணம் தந்தார் என்ற காரணத்தால் புலிகள் புகழ்ந்தது தமிழக மக்களுக்கு இழைத்த அநீதி.

#எம்ஜியார்எப்படிபட்டவர்
தமிழக மக்கள் எம் ஜி ஆரை தங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முதலமைச்சர் பதவியை சாகும் வரை தந்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் தனது பாதாள பண அறை பாதுகாப்பிற்கு எந்த  #தமிழனையும் #நம்பவில்லை பாதுகாவலராக #மலையாளிகளையே நியமித்தார்.
இவரைத்தான் புலிகளின் பிஆர்ஓ #நெடுமாறன் எம் ஜி ஆர் தனது சொந்த பணத்தை கொடுத்தார் என தீவிரமாக கூவுவார்
பெரியாரிய இயக்க வாதிகளும் தமிழக மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்துக் கொடுத்ததையோ தமிழீழ விடுதலையை கொள்கை ரீதியாக .
ஆதரிக்காதவரை விமர்சித்தது இல்லை புலிகள் தவறான நபரை புகழ்ததையும் விமர்சிக்கவில்லை
#புலிகளின்ஒரேகட்சிஆட்சி
#பிரபாகரன் :
நான் பல கட்சி ஜனநாயகத்திற்கு எதிரானவன். ஒரு கட்சி ஆட்சி மூலமாகத் தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும்.
நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை மக்களால் தேர்தெடுக்கப் பட்ட ஒரே கட்சி ஆட்சி மட்டும் உள்ள யூகோஸ்லோவில் உள்ளதைப் போன்ற தொரு பாணியிலான மக்கள் ஜனநாயகம் இருக்கும்.
1986 ஜூன் மாதம் ஆங்கில மாதமிருமுறை ஏடான இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி
திமுக தலைவர் கருணாநிதி இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ஈழ மக்களுக்கு ஜனநாயக ஆட்சி தான் தேவை. சர்வாதிகார ஆட்சி தேவையில்லை.
#திமுகவின்குறிக்கோள்
ஈழத் தமிழர்களுக்கு நிலையான நிம்மதியான ஆட்சி வேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே ஒரே கட்சி ஆட்சி சர்வாதிகாரப் போக்கு என கண்டன குரல் எழுப்பியவர். இந்த எதேச்சதிகாரத்தை வாழ்நாளெல்லாம் உரிமை களுக்கு குரல் எழுப்பிய பெரியார் அவர்களின் பெயரால் கட்சி நடத்தும் எவரும் கண்டிக்க முற்படாதது கவலைக்கும், வேதனைக்குறியதாகும்
#அப்பட்டமானமதவாதம்
புலிகளே தாங்கள் வடபகுதியில் இருந்த முஸ்லீம் மக்களின் வாழ்வுரிமையை பறித்து விரட்டி அடித்தது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது என சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தும் கூட மத அடிப்படையில் முஸ்லிம் மக்களை இம்சித்ததை பெரியாரிய இயக்கங்கள் விமர்சிக்க வில்லை என்பது மிகமிக கவலைக்குறியதும்.ஆகும்.
#பெரியாரிய #இயக்கங்கள்மறுபரிசீலனைசெய்யவேண்டும்
இன்று பெரியாரிய வாதிகள் ஆத்திகர்களைப் போன்று புலிகள் புனிதம் எனும் மனநிலை காணப்படுவதும், புலிகள் பற்றிய மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது பாவச் செயல் போல் பாவிக்கப்படுவது உண்மையில் வருத்தத்திற்குரியது. புலிகள் திராவிட இயக்க சித்தாங்களை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். அவர்கள் தமிழ் தேசியம், ஒரே கட்சி ஆட்சி என்ற நிலையில் இறுதியாக அடிப்படை மதவாதிகளாய் சொந்த மக்களை வென்றெடுக்கும் அரசியல் தெளிவற்று இங்கே உள்ள மதவாதிகளின் பாதி செயல்பாட்டை முஸ்லிம் எதிர்ப்பை விதைத்தவர்கள். இன்று புலிகள் இல்லை ஆனால் ஈழத்தின் நிலை என்ன ஏற்கனவே பாதிபணியை புலிகள் செய்து இருந்ததால் இன்று அடிப்படை மதவாதிகள் கிருஸ்துவர் எதிர்ப்பு என அங்கு நிலைமைகள் மாறிவருகின்றன புலி ஆதர வாளர் கள் பலர் இன்று அடிப்படை வாதிகளாக காட்சி தருகின்றனர். புலிகளின் பண்டார வன்னியன் கொடிக்கு பதிலாக இன்று சங்கிலி மன்னனின் நந்தி க்கொடியை உயர்த்தி பிடிக்கின்றனர். ஏன் சங்கிலி மன்னனை உயர்த்தி பிடிக்கின்றனர். சங்கிலி மன்னன் 600 கத்தோலிக்க கிருஸ்தவர்கள் மன்னாரில் கொலை செய்தார் என இன்று சங்கிலி மன்னனை உயர்த்தும் போக்கே இன்றைய ஈழம் எனவே பெரிய இயக்கங்கள் புனிதம், பாவம் என்ற கொள்கைகளை கைவிட்டு எதிர் வர இருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட புலிகளை விமர்சனத்துடனான ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு வர வேண்டுகிறோம்.
தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக