திங்கள், 16 செப்டம்பர், 2019

தூத்துக்குடியில் இரட்டைக் கொலை...

nakkheeran.in - paramasivam : தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர்
விவேக் வயது 37, இவரும் அங்குள்ள சிவந்தகுலம் பகுதி முருகேசன் வயது 35 இருவரும் நண்பர்கள். இன்று மாலை 5 மணிக்கு மேல் இருவரும் இருசக்கர வாகனத்தில் காமராஜ் கல்லூரியின் சாலை அருகே வந்திருக்கிறார்கள். அப்போது டூவீலர்களில் அவர்களை வழிமறித்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியது.
ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே இருவர் உயிரும் பிரிந்துவிட்டது. இதுதொடர்பாக தென்பாகம் காவல் ஆய்வாளர் ஜீன் குமார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார். மரணமடைந்த இருவரும் சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் வேகமாக சென்றவர்களை கண்டித்து இருக்கிறார்களாம். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இந்த கொலை நடந்ததா என்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக