திங்கள், 23 செப்டம்பர், 2019

விளிம்பு நிலை முஸ்லிம்கள் ! மறைக்கப்பட்ட உண்மைகள்

Saadiq Samad : விளிம்பு நிலை முஸ்லிம்கள் ! (ஐந்தாம் பகுதி
1994பிகார் மாநில பாட்னாவை மைய்யபடுத்தி இஜாஸ் அலி உருவாக்கிய "அகில இந்திய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மோர்ச்சா" அமைப்பு 29முஸ்லிம் தலித் பிரிவுகளை ஒன்றினைக்க முற்ப்பட்டது .
(.இந்த இஜாஸ் அலியின் போராட்டவடிவங்களிலிருந்து போலி நகல்களாக உருவானது தான் தமிழக வஹாபிய இட ஒதுக்கீடு இயக்கங்கள் (குறிப்பா பிஜை போன்றோரின் இயக்கங்களின் இட ஒதுக்கீடு குரலாக மாறியது) .
.2001ல் உ பி,ம பி ,மே வங்கம் டெல்லி,ராஜஸ்தான்,மஹாரஷ்ட்ரா,உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தநது செயல் தளங்களை விரிவு படுத்தியது இந்தியாவில் தலித் முஸ்லிம்களுக்கு அரசு பணிகளிலும் சட்டமன்ற,பாராளுமன்ற ங்களிலும் தனி இட ஒதுக்கீடு வேண்டும் இந்து தலீத்துகள்
சீக்கிய தலீத்துகள்
புத்த தலீத்துகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு உரிமையை போன்றே தலீத் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய கோரிக்கை இந்த கோரிக்கை ஒன்றே போதும் இஸ்லாத்திற்கு மாறினாலும் இன இழிவு நீங்க வில்லை என்பதற்கு சாட்சி .
அடிதள முஸ்லிம் பிரிவினரை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டிய மற்றொரு அமைப்பு "பஸ்மந்தா முஸ்லிம் மகாஸ்" ஆகும் 1998ல்பாட்னாவில் அன்வர் அலி யால் இந்த "விளிம்பு நிலை முஸ்லிம் முண்ணனி உருவாக்கப்பட்டது

பிறப்பின் அடிப்படையில் வர்ணா சிரம ,சாதிய வேறுபாடுகள் இஸ்லாத்தில் இல்லை என்று கூறிக்கொண்டாலும் அரேபிய கால பிரிவினைகள் பிரிவுகள் தொடர்ந்தே வருகிறது
முஹம்மதை அறிமுகம் செய்யும் அரேபிய வரலாறே அவர் உயர் குரைஷிகுலத்தில் பிறந்ததாகதான் கூறுகிறது அன்றுமட்டும் அல்ல இன்றும் கூட " மக்கா மஸ்ஜிதுல் ஹரமமின் இமாம் அப்துர் தஹ்மான் சுதைஸ் எனும் ஷேய்க் சுதைஸி " அன்ஜா குலத்தை சார்ந்தவர் என்றுதான் அறிமுக படுத்த படுகிறார்
.
.இந்திய முஸ்லிம்கள் வரலாற்றில் அஷ்ரப்-அஜ்லப்-அர்சால், எனும் பிரிவுகள் உள்ளதையும் அதை காலங்காலமாக கட்டிக்காத்து வருவதையும் வரலாறு மறைக்காது இஸ்லாத்தில் பிறப்பில் பிரிவுகள் இல்லை ?!?!என்றாலும் அதிகார பிரிவுகள் இருந்தே வருகிறது இந்த பிறப்பு பிரிவுக்கும் அதிகார பிரிவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை
( மேல் சாதிய பிரிவுகள் என்பதே தன்னை அதிகார வர்க்கமாக நிலை நிறுத்தத்தான்)
.இந்த அதிகார பிரிவின் விளைவே இஸ்லாத்தை கொலை களமாக மாற்றியது அபுபக்கரின் ஆட்சியில் விதை தூவி உமரின் உயிரை அறுவடை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கொலை களம் நாளையும் தொடரும் உலக அளவில்
.
இஸ்லாமிய தனி அடையாள, அதிகார பிரிவுகளில்
ஷியா
ஸுன்னி
ஸலஃபி
வஹாபி
அஹ்லெ குரானி
அஹமதியாக்கள் ஜமாத்தி இஸ்லாமி போன்ற அடிப்படை வாத அதிகார பிரிவுகளுக்கு மத்தியில் தான் லெப்பை எனும் மதம் மாறிய முஸ்லிம்களின் வாழ்வின்நிலையுள்ளது
.இந்த இஸ்லாமிய அடிப்படை வாதபிரிவுகளில் சில இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தும் வருகிறது
புற நகர் பகுதிகளான சேரி எனப்படும் குடிசைப்பகுதிகளில் முஸ்லிம்களை பற்றி மேட்டுகுடி முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களின் எந்த ஜும்மா மேடைகளும் வெள்ளி மேடை களும் விளக்கவில்லை
பொருளாதர வளர்ச்சி அடைந்த முஸ்லிம்களும் அதிகார வர்க்க ,புரோகித மவ்லவிகளும் இந்த விளிம்பு நிலை முஸ்லிம்களின் கண்ணீர் வாழ்க்கையை உலகத்தை புறக்கணித்து ,மறைத்தே வருகின்றனர்
எதை எதையோ வெளியிடும் மீடியாக்கள் இந்த மதம் மாறியும் விளிம்புநிலையில் வாழும் முஸ்லிம்களை கண்டுகொள்ளாமல் இருப்பதிலும் அடங்கியிருக்கிறது இஸ்லாமிய இயக்கங்களின் சதி
.
முஸ்லிம் இயக்கங்களின் தெரு ஆர்ப்பாட்ட,ஓட்டரசியலிலும் இம்மக்களின் நிலை வெளிப்படுத்தப்படவில்லை
.முஹம்மதின் கார்ட்டூன்களுக்காக முஹம்மதின் திரைபடங்களுக்காக கூட்டப்படும் கூட்டமும் குவிக்கப்படும் வசூல்களை போல் இம்மக்களுக்காக ஏன் கூட்டப்பட வில்லை குவிக்கப்படவில்லை? என்பது இன்றைக்கு தேவையான கேள்வி
.
வஹாபிய அடிப்படைவாதிகளின் மஸாயில், உஸுல், ஹராம்,ஹலால், ஷிர்க்,பித் அத் போன்ற வெற்று, வெறி, கூக்குரலிலின்மத்தியில் இந்த சேரி முஸ்லிம்களின் வேதனை குரல் வெளி உலகிற்கு எட்டப்படவில்லை ..
.
.(வஹாபிய குறீயிடு பொதுவில் புரிவதற்காக இந்த குறியீட்டின் பொருள் முஹம்மதீய அடிப்படைவாதிகள் என்பதே )
(இன்னும் வரும்)
.
.சாதிக் சமத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக