செவ்வாய், 24 செப்டம்பர், 2019

டொனால்ட் ட்ரம்ப்: `பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்Imran khan - Trump  விகடன் : காஷ்மீர் விவகாரத்தில், தான் மத்தியஸ்ம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார், ட்ரம்ப். இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஹெளடி மோடி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் தோன்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதற்கு அடுத்த நாளே பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஹெளடி மோடி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம், மும்பை மற்றும் அமெரிக்கா 9/11 தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் கடுமையான வாதங்களை முன்வைத்தாலும், பாகிஸ்தான் குறித்தோ காஷ்மீர் விவகாரம் குறித்தோ ட்ரம்ப் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த ட்ரம்ப், அவருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாகிஸ்தான், தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக இந்தியாவின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், `இந்த விவகாரத்தில் நான் இரானின் பெயரைச் சொல்லுவேன். உலகிலேயே இரானில் தான் அதிக தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நம்பர் ஒன்" என்றார். காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல்போக்கு நிலவியபோது, தானாக முன்வந்து காஷ்மீர் விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார் ட்ரம்ப். இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஆனால், இந்தியா இந்த கோரிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பேசித் தீர்த்துக்கொள்ளும் எனப் பதில் சொல்லப்பட்டது. எனினும், ட்ரம்ப் பல்வேறு தருணங்களில் இரு நாடுகளும் விரும்பினால், தான் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற கருத்தைத் தெரிவித்துவந்தார். ர் விவகாரம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டபோது, தனது மத்தியஸ்த ஆசையை மீண்டும் ஒருமுறை தெரிவித்தார் ட்ரம்ப். ``என்னால் முடிந்த உதவியை இந்த விவகாரத்தில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். எனினும், அது மோடி மற்றும் இம்ரான் கான் முடிவுசெய்ய வேண்டியது. இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் இது வேலைக்கு ஆகாது. இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால், இதைச் செய்ய நான் தயாராகவும் விருப்பத்துடனும், என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளேன். இந்த விஷயத்தில், இந்தியா மத்தியஸ்தம் என்ற கருத்துக்கு முன்வரும் என நினைக்கிறேன். நான் இம்ரான் மற்றும் மோடிக்கு நல்ல நண்பனாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடியும். இந்த விஷயத்தில் நான் நல்ல நடுவராகச் செயல்படுவேன். காஷ்மீரில் எல்லாம் சரியாக நடப்பதை நான் காண விரும்புகிறேன். அங்கு அனைவரும் சரியாக நடத்தப்பட வேண்டும்” என்றார். பாகிஸ்தானை நீங்கள் நம்புகிறீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், ``இன்று நான் இருக்கும் இடத்தில் இருந்த மற்ற நபர்கள், பாகிஸ்தானை மோசமாகத்தான் நடத்தினார்கள். பாகிஸ்தானும் எங்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல மாட்டேன். எனினும், இங்கே என்னுடன் இருக்கும் இம்ரான் கானை நம்புகிறேன். அதனால் பாகிஸ்தானை நம்புகிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக இம்ரான் கான் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை” என்று முடித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக