திங்கள், 23 செப்டம்பர், 2019

தெலுங்கர்களைத் தவிர்த்து மந்திரிசபை அமைக்க முடியாது!’ – ராதாரவி

Radharavivikatan -கலிலுல்லா.ச  தெலுங்குக்காரனின் 40 ஆண்டை தெலுங்குக்காரன் தானே கொண்டாட வேண்டியிருக்கிறது. தமிழன் என்று சொல்லதேவையில்லை.  இனி பேசிக்கொண்டுதான் இருப்பேன். தமிழக தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் மந்திரி சபை அமைப்பதில் தூணாக இருப்பது, தெலுங்கு இனம். தெலுங்கு இல்லை என்றால் அமைக்கமுடியாது. தேனியிலிருந்து திண்டுக்கல்வரை, தெலுங்கு பேசுபவர்கள்தான், தேர்தலில் நிற்கிறார்கள். இந்தப் பக்கம் விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் தெலுங்கர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

நான் போனதால் எனக்கு தெரியும். வேட்பாளர்களாக தெலுங்கு ஆள்களைத்தான் நிற்க வைக்கிறார்கள். `தந்தை பெரியார்’ இல்லை என்றால் இன்று திராவிடம் என்று யாரும் பேசமுடியாது. நம்முடைய இனத்துக்கு யார் ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அவர்கள்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. நாங்கள் யார் வம்புக்கும் செல்லமாட்டோம். நாங்கள் திராவிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு எப்படி வளரும்? சினிமா உலகமே இருக்கட்டும், அதில் அதிகமாக இருப்பவர்கள் தெலுங்கர்கள் தானே. வேறு யார் இருக்கிறார்கள். என்னுடைய இனம் தெலுங்கு இனம். நான் தெலுங்குக்காரன். பம்பாயிலிருந்து கன்னியாகுமரிவரை எடுத்துக்கொண்டால் திராவிடம்தான். அதில் நான் திராவிடத்தெலுங்கன். மறுக்கமுடியுமா? பெரிய இயக்குநர் ஒருவரிடம், `என்ன சார், தெலுங்கு ஆள்களை திட்டுகிறீர்கள். வந்தேறி என்கிறீர்கள். `நீங்களெல்லாம் வந்தேறி கிடையாது. திராவிடத்தெலுங்கன்’ என்றார். நாங்கள் மட்டும் திராவிடத்தெலுங்கு மற்றவர்களெல்லாம் வந்தேறியா?. வந்தேறியெல்லாம் கிடையாது. எல்லோருமே ஓர் இனம். அற்புதமான முதல்வர் நமக்கு இருக்கிறார். நாம் எல்லோரும் போய், அவரை சந்தித்து, நமக்கு ஒரு அங்கீகாரம் தேவை என்று நாம் கேட்கவேண்டும். நிச்சயமாக கொடுப்பார். பிரதமர் மோடியாக இருந்தாலும், நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பவர்கள். அதற்கு நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். 234 தொகுதிகளிலும் நம் குரல் ஒலிக்கவேண்டும். இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். தயவு செய்து, `நான் தெலுங்கன்’ என்று பெருமையுடன் இருங்கள்; தவறே கிடையாது. நம்முடைய மொழியை நாம் மறக்கக் கூடாது. நம் இனம் வாழ ஒற்றுமையாக இருந்து, முதல்வரைச் சந்திக்க தலைவராகிய நீங்கள் முடிவெடுத்துச் சொன்னீர்கள் என்றால், நானும் கலந்துகொள்ள இருக்கிறேன். இதுதான் தக்க சமயம். கோயம்புத்தூரில் பல மில்லுகளுக்கு அதிபர்கள் யார் என்றால், தெலுங்கர்கள்தான். நாம் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது. தமிழன் என்று சொல்வதெல்லாம் வேஸ்ட். ஏனென்றால் எல்லோரும் `எம்.ஆர்.ராதாவை மறந்துவிட்டார்களே’. ஆனால், என் இனம் தெலுங்கு இனம் 40வது ஆண்டை கொண்டாடுகிறார்கள். தெலுங்குக்காரனின் 40 ஆண்டை தெலுங்குக்காரன் தானே கொண்டாடவேண்டியிருக்கிறது. தமிழன் என்று சொல்ல தேவையில்லை. இனி பேசிக்கொண்டுதான் இருப்பேன். சினிமாவில் பாதிபேருக்கு மேல் தெலுங்குக்காரர்கள் தான். வாய்ப்பு போய்விடும் என வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள். சட்டமன்ற தேர்தல் நடக்கும்போதுதான் நடக்குமே தவிர, முன்னாடியெல்லாம் நடக்காது. 28 வருடம் தி.மு.க, 18 வருடம் அ.தி.மு.கவில் இருந்தவன் நான். கத்திக் கத்தி நாம் வந்துகொண்டிருக்கிறோம். எப்போது நம் இனத்துக்காகக் கத்துவோம். தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8 சதவிகிதம் ஏறியிருக்கிறது. அதற்கு காரணம் முதல்வர். அவர் அமைதியாக இருப்பார். அதனால் வெளியில் தெரியாது” என்றார். தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வரைச் சந்தித்து தெலுங்கு இனத்திற்கு என்ன தேவை என முறையிடுவோம். இனத்தைப் பற்றித் தவறாகப் பேசுபவர்கள் முதலில் அவர்கள் யார் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். நாங்கள் திராவிடர்கள். திராவிடத்தை வைத்து பேசுகிறோம். தெலுங்கை விலக்கி வைத்து யாரும் பார்த்திட முடியாது. தமிழகத்தில் தெலுங்கு மக்கள் இல்லை என்றால் ஒரு பகுதிக்கு வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக