சனி, 7 செப்டம்பர், 2019

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி; ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம்

வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி; ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம்தினத்தந்தி : வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் பெற்றோர் கோபம் அடைந்து சத்தம் போட்டனர். மதுரை புதூர் காந்தி நகரில் வசிக்கும் முத்துவின் மகளான அர்ச்சனா.  லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை  வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். வந்தவர் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
பள்ளியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்து  பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி முன் கூடிவிட்டனர். பள்ளி  நிர்வாகம்தான் இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தார்கள்.


ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் கோபமடைந்து சத்தம் போட்டனர். காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மாணவியின் மரணத்தில் உள்ள மர்மத்தை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக