ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

இமானுவேல் சேகரனின் நினவு அஞ்சலி விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

 MK Stalin attends Emmanuel Sheeran's memorial for the first time
 MK Stalin attends Emmanuel Sheeran's memorial for the first timeமுதல்முறையாக இம்மானுவேல் சேகரன் நினைவிடம் செல்லும் மு.க.ஸ்டாலின்! - ஜெ.டி.ஆர்- நக்கீரன் :
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து நடந்த சமாதான கூட்டத்தில் பங்கேற்ற இவர் 1957-ம் ஆண்டுச் செப்டம்பர் 11-ல் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 11ம் தேதி இவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினருக்கு முதல் மரியாதை செலுத்தப்படும். அதன் பிறகு அனைத்து கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 5000 காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மற்ற தலைவர்களின் நினைவிடங்களுக்கு மாலை அணிவிக்கச் செல்லும் மு.க.ஸ்டாலின் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கு இதுவரை செல்வதில்லை என்கிற கோபம் அந்தச் சமூக மக்களிடையே ஏற்பட்டிருப்பதை பாஜக பயன்படுத்தி அதன் தலைவர்களை தன் பக்கம் இழுத்து அம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என்று உறுதிகொடுத்து கடந்த இரண்டு தேர்தல்களில் தங்களுக்கு ஆதரவாக நிலைநிறுத்திக் கொண்டது. கடந்த எம்.பி.தேர்தலில் அனைத்து இடங்களிலும் முழுமையாக வெற்றிபெற்ற திமுக இடைத்தேர்தல்களில் சில இடங்களில் தோல்விக்குத் தழுவியதற்கு இவர்களின் தேர்தல் பணியும் காரணம் என்பதைத் திமுக தரப்பு உணர்ந்தது.

அதே நேரத்தில் திருச்சி வழக்கிறஞர் பொன்.முருகேசன் மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து கடந்த காலத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார். அப்போது திருச்சியில் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உதவியுடன் இந்த வருடம் நடக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திடத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இம்மானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைக் கொடுத்தார், அவசியம் வரும்படி அறிவுறுத்தினார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன், "எங்களின் விருப்பத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மூலம் திமுக தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நேற்று நேரடியாக எங்களின் அழைப்பிதழை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முறை கண்டிப்பாகக் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லியிருக்கிறார்" என்று மகிழ்ச்சியுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக