ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைக்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே விளம்பரம் ..

Date To Apply: 09.09.2019 to 30.09.2019. Address: ISRO Propulsion Complex (IPRC) located at Mahendragiri,Tirunelveli, Tamil Nadu - 627 133.
Sundar P : நேற்று எல்லா தமிழ் ஆங்கில செய்தித்தாள்களிலும் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
அந்த விளம்பரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரபுரி தாலுகாவில் இஸ்ரோ புரோபல்ஷன் என்ற மத்திய அரசு நிறுவனத்திற்கு பிட்டர், கார்பன்டர், மெக்கானிக்கல், சமையல்காரர் , டிரைவர் போன்ற வேலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது...
இதிலென்ன அதிசயம் ???
முழுக்க முழுக்க ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இது இருக்கிறது. தமிழ் வாசகங்கள் ஒரு வரிகூட இல்லை
மத்திய அரசுக்கு தேவையான ஆட்கள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். ஆனால் ஹிந்திக்காரர்களாக இருக்கவேண்டும் என்பதை இந்த விளம்பரம் தெளிவாக சுட்டிக்காட்டிள்ளது.
தமிழ்நாட்டில் பிழைப்புத் தேடி வந்த வடமாநிலத்தவர்தான் மேற்கண்ட வேலைக்குத் தகுதியானவர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் உங்களுக்கு ஐயம் வேண்டாம் .

ஹிந்தி எந்த அளவிற்கு திணிக்கப்பட்டு வருகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது இந்த நாளிதழ் செய்தி
என்ன செய்ய போகிறோம்?
வழக்கம்போல, தமிழ்நாட்டு இளைஞர்கள் ரூட் தல சண்டையிலும் கட்டவுட் வைப்பதிலும் பிசியா இருக்காங்கன்னு மீம்ஸ் போட்டுட்டு லைக் எத்தனைன்னு பார்த்துக்கிட்டு இருக்கப்போகிறோமா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக