திங்கள், 16 செப்டம்பர், 2019

அமக மு என்னுடைய கட்சி புகழேந்தி அதிரடி! என் மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்"

ammkநக்கீரன் : தினகரன் கட்சியில் முக்கிய நபர்களாக வலம் வந்த தங்கத்தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா வெளியேறியது அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே போல் கடந்த வாரம் புதுச்சேரி நிர்வாகிகள் பலர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புகழேந்தி தினகரனை திட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அதனால் அந்த பட்டியலை சேர்த்து ரெடி செய்து வைக்கிறேன். 14 வருஷம் அட்ரஸ் இல்லாமல் இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு காண்பித்து போராட்டம் எல்லாம் செய்தோம். அம்மா மரணம் அடைந்த போது கூட இவர் இல்லை என்று பேசுவது போல் இருந்தது.

இதனையடுத்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் வலது கரமாக இருந்த புகழேந்தி அக்கட்சியில் இருந்து வெளியேற போகிறர் என்ற தகவல் வந்து கொண்டிருந்த நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது,  எந்தக் காலகட்டத்திலும் எதையும் யாரையும் நம்பி இல்லை. கொண்ட கொள்கையை நம்பி இருக்கிறேன். சிறைக்கு எதற்காக சசிகலா சென்றாரோ, அந்தக் கொள்கை என்னோடு நிற்கும். எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என் மீது யார் நடவடிக்கை எடுக்க முடியும்? கட்சியே என்னுடைய கட்சி. இந்தக் கட்சியைத் துவங்க நானும் ஓர் ஆளாக இருந்தேன். என் மீது எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்? பார்ப்போம், பிறகு நான் என்ன செய்கிறேன் என்று. அமமுக எனக்குச் சொந்தமான கட்சி. ஆகவே யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்'' என்று புகழேந்தி கூறினார். இன்று தினகரன் வெளியிட்ட அமமுகவின் செய்தித் தொடர்பாளர் பட்டியலில் புகழேந்தி பெயர் இல்லை என்பது குறிப்படத்தக்கது <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக