திங்கள், 23 செப்டம்பர், 2019

அமெரிக்காவுடன் பேச வேண்டாம்: பிரதமருக்கு உற்பத்தியாளர்கள் கடிதம்.. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்

medicine-production-council-letter-to-modihindutamil.in :சென்னை . மருந்துகள், மருத்துவ உபகரணங் கள் தொடர்பான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று மருந்து உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, மருந்து உற்பத்தி யாளர்கள் சங்கத்தினரும், மருத் துவம் சார்ந்த பிற அமைப்பினரும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:
மருந்து வர்த்தகத்தில் உலக ளாவிய முக்கிய மையமாக இந்தியா விளங்குகிறது. பிற நாடுகளைச் சேர்ந்த 2 கோடிக்கு மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளி களுக்கு இந்தியாவில் இருந்து மருந்துகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகவும், செயல் திறனுடனும் இயங்கி வருவதையே இது காட்டுகிறது. மேலும், உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள், மூலக்கூறு மருந்துகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் அவற்றை விநியோகிப்பதன் மூலம் தொற்றும் நோய்களும், தொற்றா நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வர்த்தகத்தில் அமெரிக்காவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து இந்தியா பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, இந்தியாவின் மருத்துவச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரு பக்கம் இந்தியாவில் இருந்து பெரும் லாபம் ஈட்டும் அமெரிக்க மருந்து நிறுவனங்கள், மற்றொரு பக்கம் நம் நாட்டின் சட்டம், விதிமுறைகளை கடுமையாக சாடி வருகின்றன. குறிப்பிட்ட சில சலுகைகளை தங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தவிர, மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கான விலை நிர்ணயத்தில் சில கட்டுப்பாடு களை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், அதை விலக்கிக் கொள்ளுமாறு அமெரிக்க நிறு வனங்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. காப்புரிமை விதி களைத் தளர்த்துமாறும் அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத் துள்ளன.
இந்தியாவில் மூலக்கூறு மருந்துகளை பரவலாக்கவிடாமல், அவற்றை தடுக்கும் வேலைகளி லும், அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதை உணர்ந்து, அமெரிக்காவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக