செவ்வாய், 3 செப்டம்பர், 2019

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்


 வீரகேசரி :  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக