வெள்ளி, 27 செப்டம்பர், 2019

40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்..சேலம் மோகன்ராஜ் இன் கண்ராவி கதை


Hemavandhana - tamil.oneindia.com : 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்..வீடியோ சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். 42 வயதாகிறது. இவர்தான் அந்த ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம். ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தார். ஆனால் இந்த மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் ஓடியே போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ். அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.
அதற்கு பிறகு மோகன்ராஜ், பல பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார். காகாபாளையம் பஸ் ஸ்டாப் பக்கம்தான் மோகன்ராஜ் ஆட்டோ ஸ்டேண்ட். அங்கு இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களிடம் சிரித்து பேசி மயக்கி, போன் நம்பரை வாங்கி கொண்டு, பண உதவி செய்வது போல பேச்சு தந்து.. பிறகு அவர்களை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து.. மிரட்டி... உல்லாசமாக இருப்பார்.

அப்படி இதுவரை 40 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மோகன்ராஜிடம் ஏமாந்துள்ளனர்.;நேற்று முன்தினம் ஹோமோசெக்சுக்கு மோகன்ராஜ் அழைத்திருக்கிறார். இதுதான் புகாராக வெடித்து வெளியே கிளம்பியது. சம்பந்தப்பட்ட இளைஞர், போலீசில் புகார் தந்தாரா என்று உறுதியாக தெரியவில்லை. மகுடஞ்சாவடி போலீசார் மோகன்ராஜை கைது செய்து விசாரித்தனர். அதன்பிறகு அவரது செல்போனை ஆய்வு செய்த போது, இவ்வளவு காம சங்கதிகளும் வெளியே வந்தன. 
;ஒரு பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ நேற்று வெளியானது குறித்துகூட போலீசார் இவரிடம் விசாரித்திருக்கிறார்கள். பணம் தருவதாக ஆசை காட்டிதான் வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்தாராம். இப்படி பல பெண்கள் இதில் சிக்கி உள்ளதால், எல்லாருமே பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். நண்பன்தான் நண்பன்தான் இது எல்லாவற்றையும் விட கொடுமை, மோகன்ராஜின் நண்பன்தான். மோகன்ராஜ் 2 ஆட்டோக்கள் வைத்திருந்து இருக்கிறார். ஒன்று இவர் ஓட்டிக் கொண்டு, இன்னொன்றை அந்த நண்பனுக்கு தந்து ஓட்ட சொல்லி வந்துள்ளார். அந்த நண்பன்தான் இவனைவிட கேடுகெட்டவன் போல தெரிகிறது. பல பெண்களுடன் வலுக்கட்டாயமாக பேசி தொடர்பை ஏற்படுத்தி, அந்த பெண்களை மோகன்ராஜிக்கு முதலில் விருந்தாக்கிவிட்டு, அதற்குபிறகு இவனும் அந்த பெண்களை நாசம் செய்வானாம்.
இவங்க 2 பேரும் ஸ்கூலுக்கு போகும் மாணவிகளை கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை இப்படித்தான் ஸ்கூலுக்கு சென்ற பிள்ளைகளை வழியில் தடுத்து நிறுத்தி 2 பேரும் ஏற்காடுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். பிள்ளைகள் சாப்பிட கேட்பதை வாங்கி கொடுத்து, நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அதன்பிறகு சாயங்காலம் ஆனதும் ஸ்கூல் வாசலில் கொண்டுவந்து விட்டு போயிருக்கிறார்கள். இதனால் இந்த பெண் குழந்தைகளும், பெற்றோரும் கலக்கத்தில் உள்ளனர். 
;விஷயம் ரொம்ப பெரிதாகி வருகிறது.. இதில் மாவட்ட எஸ்பியே நேரடியாக இறங்கி உள்ளார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க சங்ககிரி டிஎஸ்பிக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. மோகன்ராஜ் வீடு இருக்கும் பகுதி, ஆட்டோ ஸ்டேண்ட் பகுதிகளில் விசாரணை நடந்து வருகிறது. அரசியல் பலத்துடனேயே எந்நேரமும் கெத்தாக இருந்ததாகவும், பல பெண்களை இப்படி மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் ஒருசிலர் தெரிவித்துள்ளனர். 
தேடுதல் வேட்டை மேலும் வீடியோவில் சிக்கி உள்ள பெண்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். மோகன்ராஜ் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எஸ்பி ஆபீசில் புகார் தந்திருந்தார். அந்த பெண்ணையும் இப்போது காணோம் என்கிறார்கள். அதனால் அவரை பிடித்து விசாரித்தால் இன்னும் பல விஷயம் வெளியாகும் என்பதால் தேடுதல் வேட்டை நடக்கிறது. இதைதவிர, மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தாலும் நிறைய பகீர் தகவல்கள் வெளியாகும் என்பதால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக