புதன், 4 செப்டம்பர், 2019

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்புதினத்தந்தி : புதுடெல்லி . மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும்,  துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட ஹபீஸ் சயீத், ஷக்கி ரஹ்மான் லக்வி, மசூத் அசார் ஆகியோரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்து உள்ளது. தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.


மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் தற்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி ஆக இருக்கிறான். தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக  உள்ளான்.

மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக விளங்கியவன் ஹபீஸ் சயீத். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலிலும்  தொடர்புடைய ஹபீஸ் சயீத், அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான்.

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி இருப்பவன் ஷக்கி ரஹ்மான் லக்வி.

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக