புதன், 11 செப்டம்பர், 2019

அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்.. சந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி?

tamil.oneindia.com/authors/shyamsundar : டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில் எப்படி பிரச்சனை ஏற்பட்டது, எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இன்னும் இஸ்ரோ விளக்காமல் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு இழந்த பின் நேற்று முதல்நாள் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனுடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.ஷாக் டெஸ்ட் செய்துள்ளோம்.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்து நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ சில விஷயங்களை மட்டுமே வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறது. முக்கியமான விஷங்களை இன்னும் இஸ்ரோ வெளியிடவில்லை. இதுவரை இஸ்ரோ வெளியிட்டு இருக்கும் தகவல்கள் என்று பார்த்தால், விக்ரம் லேண்டர் 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் விக்ரம் லேண்டர் ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை. விக்ரம் லேண்டர் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இதுதான் நமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல். ஆனால் விக்ரம் லேண்டர் ஏன் சரியாக லேண்ட் ஆகவில்லை. அதில் ஏற்பட்ட கோளாறு என்ன? எதனால் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று இன்னும் இஸ்ரோ வாய் திறக்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் எதுவும் அளிக்காமல் இஸ்ரோ அமைதி காத்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் ஏன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது இஸ்ரோவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். எதனால் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்று இஸ்ரோ நினைத்தால் கண்டிப்பாக கூற முடியும். அவர்களிடம் இருக்கும் டேட்டா அதற்கான பதிலை கொடுக்கும். ஆனால் இஸ்ரோ எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறது .

2006ல் GSLV-F02 ராக்கெட் வெடித்து சிதறியது, அதேபோல் கிரேயோஜெனிக் என்ஜின் சோதனை முதல்முறை தோல்வியில் முடிந்தது. இந்த சமயங்களில் எல்லாம் இஸ்ரோ மிகவும் வெளிப்படையாக துரிதமாக அதற்கான காரணத்தை சொன்னது . இதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து 4 நாட்கள் ஆகிறது. இன்னும் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதை வெளியிடப்படவில்லை. ஏன் இஸ்ரோ இப்படி தொடர்ந்து அமைதி காத்து வருகிறது என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக