புதன், 25 செப்டம்பர், 2019

மாயாவதி முன்னாள் செயலரின் ரூ.230 கோடி பெறுமான பினாமி சொத்துக்கள் முடக்கம்

hindutamil.in : புதுடெல்லி, பிடிஐ : முன்னாள் உ.பி. முதல்வர் மாயாவதியின்
முன்னாள் செயலரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான நேத் ராம் என்பவரின் ரூ.230 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
டெல்லி, நொய்டா, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள இவரது 19 அசையாச் சொத்துக்களை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பினாமி சொத்துக்களில் வர்த்தக மற்றும் குடியிருப்புச் சொத்துக்கள் அடங்கும்.

வருமான வரித்துறையினரால் நேத் ராம் ரெய்டு செய்யப்பட்டது கடந்த மார்ச் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்டில் ரூ.1.64 கோடி ரொக்கம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள மாண்ட் பிளாங்க் பேனாக்கள், 4 ஆடம்பரக் கார்கள், மேலும் ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்களுக்கான ஆவணங்கல் ஆகியவை இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக