திங்கள், 16 செப்டம்பர், 2019

இந்தி திணிப்பு 20-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் .. திமுக அறிவிப்பு !

மாலைமலர் :  இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்பாட்டம் -
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
 நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக்கும் மத்திய மந்திரி அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறது.
சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக்கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இந்தியை தேசிய மொழியாக்கும் மத்திய மந்திரி அமித் ஷாவின் ’ஒரே நாடு, ஒரே மொழி’ கருத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அமித் ஷா பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20-ம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக