நக்கீரன் :
இந்திய
ஆட்டோமொபைல் உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30
ஸ்டீல் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த
நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா
மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் ஆர்டர்கள்
குறைந்த நிலையில், மின்கட்டண உயர்வு போன்ற மற்ற காரணிகளும் இந்த முடிவுக்கு
காரணம் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே மாதத்திற்கு 15
நாட்கள் மட்டுமே இந்த நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 30 ஸ்டீல் தொழிற்சாலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மின்சாரம், பெட்ரோலியம் சுத்தகரிப்பு, இயற்கை எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட 8 அடிப்படை உள்கட்டமைப்பு தொழில் பிரிவுகள் ஆகியவை நாடு முழுவதும் கடந்த 50 மாதங்களாக தொடர் சரிவை எதிர்கொண்டுள்ளன. இந்தியா முழுவதும் தொழில்வளர்ச்சிக்கான முறையான நடவடிக்கையெய் எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழிலதிபர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக