ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

துப்பாக்கி முனையில் மருமகளை பலாத்காரம் பாஜக முன்னாள் எம்எல்ஏ ... டெல்லி ex MLA மனோஜ் ஷோகீன்

New Delhi: The Delhi Police have booked former BJP MLA Manoj Shokeen for allegedly raping and threatening his daughter-in-law at gun point on the intervening night of December 31, 2018 and January 1 this year, the police said on Saturday.
துப்பாக்கி முனை tamil.oneindia.com - vishnu-priya : டெல்லி: டெல்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் ஷோகீன் தனது மருமகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மனோஜ் ஷோகீன். இவர் பாஜகவை சேர்ந்தவராவார். இவர் நாங்லோய் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்தார். இவர் மீது மருமகள், பலாத்கார புகாரை கொடுத்துள்ளார். இதன் பேரில் அவரது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த புகாரில் அந்த பெண் கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி எனது கணவர், அவரது சகோதரர், ஒரு உறவினருடன் மீரா பாக்கில் இருந்த மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பினோம்.
ஆனால் மாமனார் வீட்டுக்கு செல்வதற்கு முன்னர் எனது கணவர் பாசிம் விகார் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடினோம். இதையடுத்து கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மாமனார் வீட்டுக்கு வந்தோம். சிறிது நேரத்துக்கு பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எனது கணவர் அவரது நண்பர்களுடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து நான் தனியறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது 2 மணியளவில் எனது அறை கதவை மாமனார் தட்டினார். அப்போது அவர் என்னிடம் முக்கியமான விவகாரம் குறித்து பேச வேண்டும் என கூறினார். இதனால் கதவை திறந்தவுடன் என்னை தள்ளிவிட்டு கதவை தாழிட்டுவிட்டார்.

பின்னர் என்னை கண்ட இடங்களில் தொட்டார். அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை அவரது அறைக்கு செல்லும் படி கூறினேன். ஆனால் அவரோ என்னிடம் துப்பாக்கியை காண்பித்து தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி என்னை துன்புறுத்தினார். பின்னர் என்னையும் என் சகோதரனையும் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டினார்.

 நான் சப்தம் எழுப்ப முயன்ற போது என்னை கன்னத்தில் அறைந்தார். பின்னர் துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். எனது திருமண வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் என் குடும்பத்தாருக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காகவும் நான் புகார் ஏதும் தரவில்லை. ஆனால் தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இதனால் தற்போது புகார் அளிக்கிறேன். என் மாமனார் மீது நடவடிக்கை எடுங்கள் என அந்த மனுவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக