வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சுதந்திர தின உரையில் மோடி .. ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜகவின் அதிரடி திட்டம்! ( ஒரே EVM ?)

ஜிஎஸ்டி என்ன tamil.oneindia.com-shyamsundar.: டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சம் ஆகும், இதுகுறித்த விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி ஆறாவது முறையாக டெல்லியில் கொடி ஏற்றியுள்ளார் .
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், ஜிஎஸ்டி மூலம் நாடு முழுக்க ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதன் மக்கள் சரியாக வரி கட்ட முடிகிறது. நாட்டிற்கு இதனால் அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி பெரிய வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே திட்டம் என்றால் இப்படித்தான் நன்மைகள் நடக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலும் இப்படித்தான். மக்களின் வரிப்பணம் இதன் மூலம் சேமிக்கப்படும். இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்த விவாதங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும். இதில் விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும். மக்களுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளிக்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நாங்கள் இனி தலையிட மாட்டோம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தலையிட கூடாது. மக்களுக்கு தங்களு தேவையானதை அவர்களே நிறைவேற்றிக்கொள்வார்கள்.



1,450 சட்டங்களை நீக்கியது

கடந்த 5 வருடத்தில் 1,450 சட்டங்களை நீக்கியுள்ளோம். மக்களின் சுதந்திரத்தை கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை நீக்கி இருக்கிறோம். மக்கள் எளிமையாக வாழ வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். ஆனால் மக்களுக்கு நாங்கள் தேவை என்றால் உடனே அந்த இடத்தில் வந்து நிற்போம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக