மாலைமலர் : அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 46 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை நிறைவு அடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கனமழை மற்றும் நிலச்சரிவால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று
இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் தொழிற்சாலையின்
குறியீடு கொண்ட வாகனங்களை தாக்கும் கண்ணி வெடிகள் உள்பட பல ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் அமர்நாத் யாத்திரை செல்லும்
வழியில் கைப்பற்றப்பட்டுள்ளன
காஷ்மீர்
பகுதியில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத
தாக்குதல்கள் நடைபெறலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத மாநில உள்துறை அமைச்சகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் அனைவரும்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மாநிலம்
சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக