புதன், 14 ஆகஸ்ட், 2019

அணைகள் நிரம்பிவிட்டன; இனி அவர்களால் தேக்கிவைக்க முடியாது!'

மேட்டூர் அணைமுதல்வர்vikatan.com - வீ கே.ரமேஷ் ( எம். விஜயகுமார் ) தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவில் வெளுத்து வாங்குவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதையடுத்து, கிடு கிடுவென மேட்டூர் அணை 100 அடியைத் தாண்டி உயர்ந்து வருகிறது. டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நீரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விடும் நிகழ்ச்சி மேட்டூர் அணையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், மேலவை உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
முதல்வர் மேட்டூர் அணையிலிருந்து 3,000 கனஅடி நீர் திறந்து விட்டார். படிப்படியாக 10,000 கன அடி நீர் திறக்கப்படுவதாக தெரிவித்தார்கள்.











மேட்டூர் அணை
பிறகு மேடையில் பேசிய முதல்வர்,``மேட்டூர் கிழக்கு, மேற்கு வாய்க்கால்கள் மூலம் 137 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். இதிலிருந்து 155 திட்டங்கள் மூலம் தினசரி 8 மாவட்டங்களுக்குக் குடிநீராகப் பயன்படுகிறது. 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. அணை மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா ஆட்சியில் குடிமராமத்துப் பணியின் மூலம் தூர்வாரப்பட்டது. திறந்து விடப்படும் நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வருண பகவான் கருணையால் தண்ணீர் பிரச்னை தீரும். கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டதால் இனி அவர்களால் தேக்கி வைக்க முடியாது. அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே நமக்குத் திறந்துவிடுவார்கள்.





பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 39,000 ஏரிகள் ரூ.1250 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளன. காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். ஏற்கெனவே இரண்டு தடுப்பணைகள் கட்டி முடியும் தறுவாயில் உள்ளன. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேறிய பிறகு அந்தியூர், ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு என அனைத்து பகுதிகளுக்கும் நீரேற்று முறையில் பாசன வசதிகள் செய்து தரப்படும். விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்கிற ஒரே அரசு அம்மா அரசு.




மேட்டூர் அணை




மேட்டூர் அணை
ஓமலூர் டு தாரமங்கலம் காய்கறிப் பூங்கா, சென்னையில் உணவுப் பூங்கா, தலைவாசலில் கால்நடைப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. டெல்டா பகுதிகளில் உள்ள கால்வாய்களை கான்கிரீட் போடுவதற்கு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் 20 சதவிகித நீரை சிக்கனப்படுத்த முடியும். பொள்ளாச்சியில் ரூ.500 கோடியில் சொட்டு நீர்ப் பாசனம் முறையில் விவசாயம் செய்யப்பட இருக்கிறது'' என்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக