ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அமித் ஷா ரஜினிக்கு அழைப்பு ... தமிழக, பா.ஜ., தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளராகவும்

முதல்வர்,வேட்பாளராக்க,முயற்சி,ரஜினிக்கு, அமித் ஷா, அழைப்பு தினமலர்   தனிக்கட்சி துவக்குவதை விட, பா.ஜ.,வில் சேர்ந்தால், நடிகர் ரஜினிக்கு, தமிழக, பா.ஜ., தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் தருவதாக, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், முதல்வராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பா.ஜ., அரசு ஏற்படுத்தப்பட்டது.
எனவே, தமிழகத்திலும், முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், வெளிநாடு செல்லும் போது, கறுப்பு பணம் பதுக்குவதற்கான பயணம் என்ற வதந்தியை கிளப்ப, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்க உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடிக்க, பல குழுக்களையும், அணுகி வருகின்றனர்.


அதே நேரத்தில், பல வதந்திகளை கிளப்பி, போராட்டங்கள் நடத்தி, ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் குழப்பத்தை, ஏற்படுத்த, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியை, அமித் ஷா துவக்கி உள்ளார்.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் வெளியீட்டு விழாவில், ரஜினி, காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதாக, அமித் ஷாவை பாராட்டினார்.

'பிரதமர் மோடியும், அமித் ஷாவும், கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள்' என்றும் புகழ்ந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின், ரஜினியிடம் அமித் ஷா தனியாக பேசியுள்ளார். அப்போது, 'பா.ஜ., கட்சியில், ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். உங்களை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் கொண்டு வருகிறேன்' என, கூறியிருக்கிறார்.<
இதையடுத்த சில நாட்களில், ரஜினியிடம், 'சித்திரை மாதத்தில், தனிக்கட்சி துவக்குவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ஆம் என்றோ, இல்லை என்றோ, அவர் பதிலளிக்காமல், 'உங்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன்' என, மழுப்பலாக தெரிவித்தார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக