திங்கள், 5 ஆகஸ்ட், 2019

குழந்தையைக் கொன்னுடுவோம்னு ஆதம்பாவா மிரட்டினார்..!" - அச்சத்தில் ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி

ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.சுதர்சன் காந்தி..vikatan.com -கண்ணன் ர : திருவான்மியூர் மற்றும் தி.நகரில் உள்ள தங்களது வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார், ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ், திடீர் மாரடைப்பால் ஏப்ரல் 13-ம் தேதி உயிரிழந்தார். அரசியல், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் இவர் சம்பாதித்த பணத்தின்மூலம் சென்னையிலும் சொந்த ஊரான ராமநாதபுரத்திலும் பல இடங்களில் சொத்துகளை வாங்கினார். அவர் உயிரிழந்த பின், அவருடன் பல வருடங்கள் நண்பராக இருந்த ஆதம்பாவா என்பவர், அந்தச் சொத்துகளை அபகரிக்க முயல்வதாக, ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார். ரித்தீஷ் ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்து வைத்திருந்த திருவான்மியூர் மற்றும் தி.நகரில் உள்ள அவரது வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார். அதுகுறித்து அறிய ஜோதீஸ்வரியை சந்தித்துப் பேசினோம்.
"என் கணவர் உயிரோடு இருக்கும்போது, பல்லடத்தைச் சேர்ந்த சுப்ரமணிகிட்ட முட்டுக்காடு, உத்தண்டி, திருவான்மியூர், தி.நகர்னு மொத்தம் ஆறு சொத்துகள் வாங்க ஒப்பந்தம் போட்டார். அந்த ஆறு சொத்துகளுமே வில்லங்க சொத்துகள்தான். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துகளை 24 கோடிக்கு வாங்கணும்னு ஒப்பந்தம் போடப்பட்டது. அதுல 5 கோடி ரூபாய் கொடுத்துட்டார். அந்தப் பத்திரத்துல ரித்தீஷ் இவ்ளோ கொடுத்திருக்கார், இந்தச் சொத்துகள் மேல இருக்கிற வழக்கை எல்லாம் சுப்ரமணி முடிச்சுக்கொடுப்பதாகவும் மீதமுள்ள தொகையை ரீத்தீஷ் கொடுத்துட்டா, ஆறு சொத்துகளும் என் கணவர் பெயருக்கு வந்துடும்னும் இருக்கு.




ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.
5 கோடி முன்பணமா கொடுத்ததுனால சுப்ரமணியின் ஒப்புதலின் பேரில் திருவான்மியூர்ல இருக்கிற வீடும் தி.நகர்ல இருக்கிற வீடும் எங்க கன்ட்ரோலுக்கு வந்தது. இந்த வீட்டுக்கு நாங்க குடிவர்றதுக்காக சில வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது. இந்த நேரத்துல என் கணவர் இறந்ததுனால, இதை எப்படிக் கையாளுறது எனக்குத் தெரியலை. அவர் இறந்த பிறகுதான் இது வில்லங்க சொத்துனு மொத்த விவரத்தையும் வக்கீல் குணசேகர் எனக்கு சொன்னார். அது தொடர்பாக சுப்ரமணியை சந்திச்சு, 'மீதமுள்ள பணத்தை என்னால கொடுக்க முடியாது. அதனால, என் கணவர் கொடுத்த பணத்தை என்கிட்ட கொடுத்திருங்க. நான் விலகிக்கிறேன்'னு சொன்னேன். ஆனா அவங்க, 'பணம் எல்லாம் தரமுடியாது. உடனே விலகிக்கோங்க'னு சொல்றாங்க.



பல வருடமா என் கணவர்கூட இருந்தவர் ஆதம்பாவா. என் கணவர் இறந்தபிறகு, தன்னிடம் இருந்த 5 கோடியை வாங்கித்தான் சுப்ரமணிக்கு முன்பணம் கொடுக்கப்பட்டதுனு ஆதம்பாவா சொல்கிறார். அவர்கூட வழக்கறிஞர் குணசேகர், ஆடிட்டர் சீதாராம், சொத்தை விற்க ஒப்பந்தம் போட்ட சுப்ரமணி எல்லோரும் இருக்காங்க. இவங்க எல்லோரும் சேர்ந்துக்கிட்டு வீட்டை காலி பண்ணச்சொல்லி எங்களை டார்ச்சர் பண்றாங்க. திருவான்மியூர் வீட்டின் பூட்டை உடைச்சு பிரச்னை பண்ணாங்க. அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கேன். ஆனா, அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலை.


ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.


ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.
அப்புறம், கமிஷனர்கிட்ட புகார் கொடுத்ததுக்குப் பிறகு, '2 கோடி ரூபாய் மட்டும் கொடுக்கிறோம். மூணு கோடி ரூபாய் நான் வெச்சுக்கிறேன்'னு சொல்றார் ஆதம்பாவா. அந்த சொத்துகளை அவங்க எடுத்துக்கிற பிளானும் இல்லை. என்னை இதுல இருந்து கழட்டிவிட்டுட்டு வேற ஆட்களுக்கு விற்க திட்டமிட்டிருக்காங்க. அதுல வர்ற பணத்தை எல்லாரும் பிரிச்சுக்கப் பார்க்குறாங்க. நான் பணத்தைக் கேட்குறதுனால 'கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பாட்ஷா எங்களுக்கு நல்ல பழக்கம். உன் குழந்தைகளை கடத்திக் கொன்னுடுவோம். ஜெயிலுக்குப் போறது எல்லாம் எங்களுக்கு லாட்ஜுக்குப் போற மாதிரி. எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் ரெண்டு நாள்தான் பேசுவாங்க. அப்புறம் மறந்திடுவாங்க. 50,100-க்கு கொலை பண்ணும்போது கோடி ரூபாய்க்கு கொலை பண்ண மாட்டோமா'னு பயமுறுத்துறாங்க. அதுக்கான ஆடியோ எங்ககிட்ட இருக்கு. காவல்துறைதான் நடவடிக்கை எடுக்கணும். முதலமைச்சரைப் பார்க்க அனுமதி கேட்டிருக்கேன். என் கணவர் ஆத்மா இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, ஆதம்பாவா என்பவரிடம் பேசியபோது, "ரோட்டுல போகும்போது நம்மளை பார்த்து நாய் குரைச்சா நம்மளும் திரும்பி குரைக்க முடியுமா? ரொம்பத் தரம் தாழ்ந்து பேசுறாங்க. இப்போ, அவங்க பேசுறதுக்கு பதிலளிக்கிற மனநிலையில நான் இல்லை. அவங்க குணம் தெரிஞ்சதுனாலதான் அவங்களுக்கு ஆதரவா யாரும் இல்லை. அவங்க கணவன் இழந்த மன வருத்தத்துல அப்படி பேசுறாங்க. நண்பனை இழந்த வேதனை எனக்கும் இருக்கு. அவங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலை. நான் ஐந்து குழந்தைகளுக்கு தகப்பன். நான் எப்படி குழந்தையைக் கடத்துவேன், கொல்லுவேன்னு சொல்லுவேன்? கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. அவங்க விசாரணைக்குக் கூப்பிடட்டும். என்ன பேசணுமோ அங்கே பேசிக்கிறேன்" என்றார்.


ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.


ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி.
வழக்கறிஞர் குணசேகரிடம் பேசும்போது, "ரித்தீஷுக்கு 15 வருடமா நான் வழக்கறிஞரா இருக்கேன். அவருடைய வழக்குகளை எல்லாம் நான் பார்க்கிறேன், அவ்ளோதான். அவர் இறந்த பிறகு ஒரு முறை அவர் மனைவியை சந்திச்சிருக்கேன். மத்தபடி அவங்க மிரட்டுறதா சொல்ற எதுவும் எனக்குத் தெரியாது" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக