வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சித்தியும், அக்காவும், தம்பியின் காலை பிடித்துக் கொள்ள, சரத்குமார் கழுத்தை நிதானமாக அறுத்து .... கள்ள உறவு கொலை ...

Illegal Relationship with Own sisteer and Elder Brother arrested near Villupuram tamil.oneindia.com - hemavandhana.: சித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. தம்பியை கொன்ற அண்ணன் உளுந்தூர்பேட்டை: சொந்த சித்தியுடன் கள்ள உறவு.. உடன் பிறந்த தங்கச்சியை பல நாள் மிரட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. என வாழ்ந்து வந்திருக்கிறான் கொலைகார சரத்குமார் என்ற 21 வயசு இளைஞன்! அதனால்தான் 15 வயது தம்பியை காப்புக் காட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறான் கொடூரன்!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் அயன் குஞ்சரம். இங்கு வசித்து வருபவர் கேசவன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி. கூலிவேலை செய்து வருகிறார். இவர்களது மூத்த மகன் சரத்குமார். வயசு 21 ஆகிறது. கரும்பு வெட்டும் தொழில் செய்கிறார். 2-வது மகன் சிவக்குமார். வயசு 15. அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்புக்காட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான் சிவக்குமார். யார் கொலை செய்தார்கள் என்றே தெரியவில்லை, கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இது சம்பந்தமான விசாரணையை போலீசார் கையில் எடுத்தனர். இதற்கு முக்கிய க்ளூவாக இருந்தது மோப்ப நாய் ராக்கிதான். நேராக ஓடிப்போய் சிவக்குமார் வீட்டு வாசப்படியில் போய் படுத்து கொண்டுவிட்டது.

அதன்பிறகுதான் சிவக்குமாரின் குடும்பத்தினர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இவர்களை ரகசியமாகவும் கண்காணிக்க ஆரம்பித்தனர். அப்போது சிவக்குமார் அண்ணன் சரத்குமார் சிக்கிவிட்டான். போலீசாரிடம், தம்பியுடன் அடிக்கடி சண்டை வரும்.. அந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்ததாக சொன்னான். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பகீர், பகீர் விஷயங்களை சொல்லி உள்ளான் சரத்குமார்.
சிவக்குமாரின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கவும், இங்கே பராசக்தி இஷ்டத்துக்கும் ஆடியிருக்கிறார். தாயின் செயல்பாடுகளை சரத்குமார் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய சொந்த சித்தியுடன் கள்ள உறவு வைக்க ஆரம்பித்திருக்கிறான் சரத்குமார். அப்படி ஒருநாள் ஜாலியாக இருந்தபோது, இந்த கண்றாவியை, சரத்குமாரின் உடன்பிறந்த தங்கை நேரில் பார்த்துவிட்டாள். அதனால் தங்கச்சியையும் கொலை மிரட்டல் விடுத்தே பாலியல் கொடுமையை செய்திருக்கிறான் இந்த சரத்குமார்.
சரத்குமார் முரடன் என்பதால் எதையுமே அந்த பெண்ணும் வெளியில் சொல்லவில்லை.ஆனால் அண்ணன், தன் அக்காவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சிவக்குமார் பார்த்துவிட்டான். இங்கேதான் விவகாரம் முற்ற ஆரம்பித்திருக்கிறது. சிவக்குமார் இதை வெளியில் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில்தான் அவனை கொல்ல முடிவு செய்தது. முயல் வேட்டை என்றால் சிவக்குமாருக்கு ரொம்ப பிடிக்குமாம். ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் லீவு என்பதால், அன்று முயல் வேட்டைக்கு காப்புக்காட்டுக்கு போவானாம்.
இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட சரத்குமார், தம்பியை கொல்ல போவதாக சித்தி மற்றும் தங்கையிடம் சொல்லி உள்ளான். மேலும் கொலை செய்வதற்கு அவர்களையும் கூடவே அழைத்து சென்றுள்ளான். பாறை இடுக்கில் முயல் இருக்கிறது பார், அதை பிடி என்று சொல்லவும் பாறைக்குள் முயலை பிடிக்க தலையை விட்டான் சிவக்குமார். அப்போதுதான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரின் தலையை வெட்டி உள்ளான். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிவக்குமார், அண்ணனின் கொலைவெறி பிடியில் இருந்து தப்பி ஓடினான். ஆனால் சித்தியும், அக்காவும், சிவக்குமாரின் காலை கெட்டியாக பிடித்துக் கொள்ள, சரத்குமார் கழுத்தை நிதானமாக அறுத்து கொன்றான்.
சொந்த தங்கையை நாசம் செய்தது முதல் தவறு, சொந்த சித்தியுடன் கள்ள உறவு வைத்திருந்தது அடுத்த தவறு, கூட பிறந்த தம்பியை கொன்றது 3-வது தவறு.. என தவறுமேல் தவறு செய்த சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பெண்களையும் சேர்த்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக