செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

மாயாவதியை பயம் ஆட்டுவிக்கிறதா.. ஊழல் வழக்குகளில் கைது பயம் ?

nakkheeran.in - ஆதனூர் சோழன் : பாஜக அரசின் பெரும்பான்மை பலமும், ஊழல் புகார்களில் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை ஆட்டுவிப்பதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழற்றிவிட்டபோதே மாயாவதியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் மற்றும் அகிலேஷும் பாஜகவுக்கு பயப்படுவதாக கூறினார்கள்.  மக்களவைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸை விட பாஜகவே மேல் என்று இருவரும் வெளிப்படையாகவே கூறினார்கள். மாயாவதி மீதும், முலாயம் மற்றும் அகிலேஷ் மீதும் ஏராளமான ஊழல் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன. அந்த புகார்கள் மீது இதுவரை பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காகவும் அங்கு சிறைப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் நலம் அறியவும் ராகுல் தலைமையில் சென்ற தலைவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீர் சென்றது பிரச்சனையை அரசியலாக்க அரசுக்கு உதவியாக அமைந்துவிட்டது. காஷ்மீரில் நிலைமை சீராகும்வரை பொறுத்திருந்து, பிறகு சென்றிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மட்டுமின்றி, பாஜகவின் எல்லா முடிவுகளையும் மாயாவதி கட்சி ஆதரித்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக