tamil.goodreturns.in - prasannavenkateshkrishnamoorthy-lekhaka :
இந்திய
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்தவர்களின் மிக முக்கியமானவர் ரகுராம்
ராஜன், இவரது தலைமையில் நாட்டுப் பொருளாதாரத்திலும், வர்த்தகச்
சந்தையிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும்
சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தப் பல நடவடிக்கையை
எடுத்தார். அதுமட்டும் அல்லாமல் இவரது தலைமையில் தான் யூபிஐ பணப் பரிமாற்ற
முறை கொண்டு வரப்பட்டது.
இதுமட்டும் அல்லாமல் 2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுத்த திறன் வாய்ந்த பொருளாதார வல்லுனர். தற்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மிகவும் கவலைக்குரிய விஷயம், இதை மத்திய அரசு உடனடியாகச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிலும் முக்கியமான பவர், வங்கியியல் அல்லாத துறைகளை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை அவசியம்.
இதுமட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களை அதிக முதலீடு செய்யும் வகையில் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன்.
அதேபோல் மோடி அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதாவது GDP கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு முன் மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிற்கு அதிகமாகக் காட்டப்படுகிறது, இதை மாற்றியமைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார், ஆனால் அதை மத்திய அரசு கேட்கவில்லை. இப்போது ரகுராம் ராஜனும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரகுராம் ராஜன் 2013 முதல் 2016 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தார். ஆனால் மோடி அரசும் ரகுராம் ராஜனுக்கும் பல முறை முட்டிக்கொண்டதால் 2வது பணிக்கால நீட்டிப்பை மறுத்தார்.< பல்வேறு தனியார் நிறுவனங்கள் துறை சார்ந்த வளர்ச்சி அளவீட்டை வெளியிட்டு வருகிறது, இது அரசு கணிப்புகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வருத்தப்படும் அளவிற்கு மோசமான நிலையை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.
; 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 6.8 சதவீதமாக இருக்கிறது. 2014-15க்குப் பின் மிகவும் மோசமான சரிவை இந்தியா சந்தித்துள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் உயரும் எனச் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை எப்படிச் சாத்தியம், எப்படி மத்திய அரசு இதைச் சாத்தியப்படுத்தப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆட்டோமொபைல் துறை முதல் FMGC துறை வரையில் அனைத்து துறையின் வர்த்தக வளர்ச்சியும் தற்போது மோசமான நிலையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இதை உடனடியாகச் சரிசெய்யப் புதிய கொள்கை சீர்திருத்தங்கள் கட்டாயம் அவசியம். டட
இதைச் செய்தால் தான் நாட்டின் பொருளாதாரம் கணிப்பின் படி 7 சதவீதமாவது உயரும்.
இதை அடையக் குறைந்தது கூடுதல் 3 சதவீத வளர்ச்சிக்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்தால் தான் திட்டமிட்டபடி 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைய முடியும். தற்போது இருக்கும் சர்வதேச பொருளாதார நெருக்கடியில் தனியார் நிறுவனங்களை அதிகளவில் முதலீடு செய்ய வைத்து நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். இதைச் செய்யாத பட்சத்தில் நிச்சயம் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ரகுராம் ராஜன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக