மின்னம்பலம் :
அரசியல்
சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு கடும்
எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் காலை 11.17 மணியளவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கான சட்டத் திருத்த ஆவணங்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டார்.
இனி ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும், லடாக் பகுதி சட்டமன்றமில்லா யூனியன் பிரதேசமாகச் செயல்படும் எனவும் அமித் ஷா அறிவித்தார். லடாக் பகுதியில் நிர்வாகி மட்டுமே இருப்பார். இதற்கான அங்கீகாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக