வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

வைகோ தேசத்துரோக வழக்கில் இருந்து விடுதலை!

மின்னம்பலம் :
வைகோ மீது கலைஞர் போட்ட வழக்கு: விடுதலை செய்த கருணாநிதி
திமுக ஆட்சியில் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயல்வதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். இதனையடுத்து பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வைகோவுக்கு எதிராக அப்போதைய திமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே இவ்வழக்கில் விசாரணை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றச்சாட்டுப் பதிவு, சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை என வழக்கு அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வைகோ ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 30) சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி தீர்ப்பு வழங்கினார். பத்திரிகை செய்தியைத் தவிர வைகோ பேசியதற்கான வேறு ஆதாரங்கள் அரசு தரப்பு அளிக்கவில்லை எனவும், செய்தி எழுதிய பத்திரிகையாளரும் விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கருத்து தெரிவித்தார். மேலும், வைகோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்பின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதால் அவரால் ஆஜராகமுடியவில்லை என்று அதற்குரிய ஆதாரங்களுடன் அவரது தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக