நக்கீரன் -ாஜ்ப்ரியன் :
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு உடல் வீசப் பட்டிருந்துள்ளது.
இதனை ரயில்வே பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஊழியர்கள் பார்த்துள்ளனர். அவர்களைப்போல் அந்த வழியாக சென்ற பொதுமக்களில் சிலர் பார்த்துள்ளனர்.
இதுப்பற்றி உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்துக்கு தகவல் கூறினர். அந்த தகவல் கிடைத்ததும் போலிஸார் வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இறந்த பெண் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் யார் என சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் ஒரு சிசிடிவி கேமராவில், தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணோடு ஒரு இளைஞர் சென்றது பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் யார் என போலீசார் தேடிவருகின்றனர்.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக