செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

சமத்துவபுரங்களில் கோயில் கூடாது: தி.க மாநாட்டில் தீர்மானம்!

சமத்துவபுரங்களில் கோயில்  கூடாது: தி.க மாநாட்டில் தீர்மானம்!மின்னம்பலம் : பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோயில்கள் கட்டுவது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 28) திராவிடர் கழக பவள விழா மாநாடு தொடங்கியது. சேலம் அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில் அன்னை மணியம்மை யார் நினைவரங்கத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்வில், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பழநி.புள்ளையண்ணன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தி.க துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். காலை 10.30 மணிக்கு பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் சண்முகம் மாநாட்டினை திறந்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பெரியார், மணியம்மையார் படத் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமெனவும், மாணவர்களிடம் ஜாதி பாகுபாட்டை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்திட தமிழக அரசை வலியுறுத்தியும், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தியும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும் என்று குறிப்பிட்டும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கை வரைவைத் திரும்பப் பெற வேண்டும், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு முழு உரிமை அளிக்கப்பட வேண்டும், மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனவும், கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வேருக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழ் நாட்டின் பொது வாழ்வில் ஈடுபட்டு, எள்முனை அளவுக்குக்கூட எந்தவிதப் பங்களிப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யாத நிலையில், வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக்கி, அரசியலில் அடி எடுத்து வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்ப வர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கையால் மலம் எடுக்கும் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் என்றும் பவள விழா மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக