samayam.com : புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் விவகாரத்தில் அதிரடியாக பேசியுள்ளார்.
துணை
குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பணிகள் குறித்த புத்தகம்,
இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, நான் தமிழ் கற்க முயற்சி செய்தேன். ஆனால் பல்வேறு பணிகள் காரணமாக முடியாமல் போனது. எனவே தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையில் விரைவில் தமிழில் பேசிக் காட்டுவேன். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டார்.
அவருடைய மாணவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவருடைய வாழ்க்கை நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு உதாரணம். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.
படிப்படியாக பல்வேறு பதவிகள் வகித்து, இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது, வெங்கையா நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது மாநிலங்களவை தலைவராகி உள்ளார். காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை மாநிலங்களவையில் கொண்டு வந்த போது, மிகுந்த சங்கடத்தில் இருந்தேன்.
எனது பிரச்சனைகளை அனைத்தையும் தீர்த்து, மசோதா நிறைவேற வெங்கையா நாயுடு பெரிதும் உதவினார். அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், நடுநிலையாக இருந்து சட்டம் நிறைவேற உதவி புரிந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக