வெப்துனியா : இன்றைய இணைய உலகில் ஒரே நாளில் சாதாரணமான
ஒருவர் கூட உலகப் புகழ் பெறுவது என்பது சாத்தியமான ஒன்றாகவே
கருதப்படுகிறது. அந்த வகையில் ரயிலில் பிச்சை எடுக்க பாட்டு பாடிக்
கொண்டிருந்த பெண் ஒருவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பாடகியாக மாறி
உள்ளார்
ராணு மோண்டால் என்ற பெண் வட இந்தியாவில் உள்ள ரயிலில் பிச்சை எடுப்பதற்காக பாடிக் கொண்டிருக்கிறார். இவர் லதா மங்கேஷ்கரின் பாடலை அச்சு அசலாக அவர் குரலிலேயே பாடி உள்ளதை ரயிலில் சென்ற பயணிகள் ரசித்து கேட்டனர். அதில் ஒருவர் இந்தப் பெண் பாடியதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ ஒரே நாளில் உலகம் முழுவதும் வைரல் ஆகியது
இதனை அடுத்து அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்த தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பேட்டி எடுத்து அவரை தொலைக்காட்சியில் பாடவும் வைத்தது. இதனால் அவர் ஒரே நாளில் மீண்டும் உலகப் புகழ்பெற்ற நிலையில் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தான் இசையமைக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றில் அந்த பெண்ணுக்கு பாடல் ஒன்றை பாடும் வாய்ப்பை அளித்துள்ளார்.">மேலும் ஒரு சில பாலிவுட் இசையமைப்பாளர்களும் அந்த பெண்ணுக்கு பாட வாய்ப்பு அளிப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரயிலில் பிச்சை எடுப்பதற்காக பாடிக் கொண்டிருந்த ராணு மோண்டால் தற்போது தொழில்முறை பாடகியாகி உள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக