புதன், 14 ஆகஸ்ட், 2019

மது அருந்திய மாணவர்கள் காமராஜ் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்த வேண்டும் .. நீதிமன்றம்

மாலைமலர் : மது குடித்து விட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு சென்னை ஐகோர்ட் கிளை காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தப்படுத்த வேண்டும் என நூதன தண்டனை அளித்துள்ளது.
மது குடித்த மாணவர்களுக்கு சென்னை ஐகோர்ட் கிளை நூதன தண்டனை ஐகோர்ட் மதுரை கிளை மதுரை: அருப்புக்கோட்டை கல்லூரியில் மது அருந்திவிட்டு சில மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் இருந்து நீக்கியது. இதை எதிர்த்து, தங்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்கக் கோரி மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஐகோர்ட் கிளையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் சுதந்திர தினத்தன்று சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மது விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக