வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

வங்கிகள் இணைப்பு .. வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு .. பஞ்சாப் நஷனல், ஓரியண்டல் வங்கி ,யுனைட்டெட் வங்கி.....

ஒன்றாக இணைகிறது பல பொதுத்துறை வங்கிகள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்புtamil.news18.com : பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்வேறு பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யூனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகிறது. இது நாட்டின் இரண்டாவது பொதுத்துறை வங்கியாக ரூ.17.95 லட்சம் கோடி மதிப்புடன் இருக்கும் வங்கியுடன் சிண்டிகேட் வங்கி ஒன்றாக இணைகிறது. நாட்டின் நான்காவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ரூ.15.20 லட்சம் கோடி மதிப்புடன் இது இருக்கும்
இந்தியன் வங்கியுடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. நாட்டின் ஏழாவது பொதுத்துறை வங்கியாக ரூ.8.08 லட்சம் மதிப்புடன் இந்த வங்கி இருக்கும்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் வங்கி ஒன்றாக இணைக்கப்படுகிறது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது இருக்கும்.
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.  18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்துடன் இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக