புதன், 14 ஆகஸ்ட், 2019

படு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா?

படு வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு.. காஷ்மீர் பிரச்சனையும் ஒரு காரணமா? tamil.goodreturns.in - pugazharasi-s : மும்பை : இந்தியாவில் நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனையால், பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பிலான கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள, வெளி நாட்டு முதலீட்டாளர்கள், தங்களது இலாபத்தை இழக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனையும் தொடர்ந்து நீடித்து வருவதால், தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் மும்பையின் குவாண்டார்ட் ஆர்ட் மார்கெட் சொல்யூஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் லோதாவின் அறிக்கையின் படி, இந்திய ரூபாயின் இந்த வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான குறுகிய கால கடன் முதலீடுகளுக்கான நாணய அபாயத்தை வழக்கமாக பாதுகாக்காததால், பெரும்பாலான லாபத்தை அழிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த மாதத்தில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இது இரண்டாவது மோசமான வீழ்ச்சியாகும்.
மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தத்தை கொடுக்கும் 370 பிரிவை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையானது, சீனா - அமெரிக்கா வர்த்தக பிரச்சனையில், வளர்ந்து வரும் நாடுகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய காரணமாக அமைந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு நிலையானதாக இருந்த வரையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது புதிய அளவிலான சரிவைக் கண்டிருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பிலான பாண்டுகளில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள், நஷ்டத்தை கண்டு வருகின்றனர்.

இந்திய பாண்டுகளில் முதலீடு செய்வதற்கு, அன்னிய முதலீட்டாளர்களுக்கான விதிகளை இந்திய அரசு தளர்த்திய போது, வெளி நாட்டினர் இந்த கடன் பத்திரங்களை வாங்க மிக ஆர்வம் காட்டினர். ஏனெனில் மிக வளர்ந்த சந்தைகள் கூட தற்போது மிக குறைந்த லாபத்தை தருகின்றன, இந்த நிலையில் இந்திய போன்ற அதிக லாபம் தரும் நாடுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 430 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய இருப்புகள் மற்றும் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலையானதொரு ஆட்சி, கொள்கை வகுப்பாளர்களுக்கு வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் அதிகாரம் அளிக்கின்றன. இதனால் ரூபாயில் மதிப்பு முன்னர் நிலையானதாக இருந்தது.
இந்த நிலையிலேயே கடந்த 10 ஆண்டுகளில், 7 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு சரிந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பு கட்டுக்குள் இருந்தது. ஆனால் இது போன்ற எந்த வித பிரச்சனையாக இருந்தாலும், இந்தியா போன்ற அதிக வட்டி கொடுக்கும் நாடுகளில், முதலீடு செய்ய மற்ற நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக