புதன், 14 ஆகஸ்ட், 2019

என் உயிருக்கு ஆபத்து... பதபதைக்கும் குரலில் ஜெ தீபா வெளியிட்ட ஆடியோ!

வெப்துனியா:  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த ஆடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன்.>இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்க உள்ளேன். ராஜா ஒருமுறை எனது வீட்டுக்கு முன் ஏதோ ஒரு கூட்டம் நடக்கும் சமயம் எங்கள் இருவர் மீதும் திராவகம் வீசப்படும் என்று சொன்னதற்கு எல்லா ஆதாரம் இருக்கிறது.இதுபோல எத்தனையோ நடந்து விட்டது. அதை காவல்துறையிடம் முறையாக கொடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். மொத்தத்தில் எங்களை வீழ்த்த வேண்டும் என ஒரு கூட்டு சதி நடக்கிறது.
என்னை என் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டு எப்படியாவது என்னையும் தனிமைப்படுத்தி ஏதோ செய்ய வேண்டும் என்று சதி திட்டம் அவர்களிடம் இருக்கிறது. நிரந்தரமாக என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தையே நான் இழந்துவிட வேண்டும் என்று என் மேல் வீண் பழி சுமத்தி கெட்ட பெயர் உருவாக்க வேண்டும், மக்களிடம் நல்ல பெயரோ, நல்ல எண்ணமோ என் மீது இருக்கக்கூடாது என்பதுதான் சதி என ஆடியோவில் பேசியுள்ளார்.
உண்மையில் இந்த ஆடியோவில் பேசியது தீபாதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அதை தெளிவுப்படுத்தும் நோக்கத்தில் போலீஸார் உள்ளனர்.



நான் தொடங்கிய பேரவை 2 ஆண்டு காலமாக நடந்து வந்த ஒரு அரசியல் அமைப்பு. அதை தாய் கழகமான அதிமுகவுடன் இணைக்கும் தருவாயில் எனக்கு சில தொந்தரவுகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த பேரவையில் செயல்பட்டு வந்த சிலர் தேவையற்ற வகையில் எனக்கு தொந்தரவு அளித்துக் கொண்டு இரவு, பகலாக போன் செய்வதுடன், வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் 24 மணி நேரமும் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எனவே, தார்மீக அடிப்படையில் ஒரு தனிநபராக அரசியலில் இருந்து விலகிவிட்ட சூழ்நிலையில் எனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தயவுசெய்து காவல்துறை விரைந்து கவனம் செலுத்தி எனக்கும், எனது கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
என்னுடைய உயிர், உடமைகள் மற்றும் அனைத்துவிதத்திலும் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக 6 பேர் சேர்ந்து, தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி டார்ச்சர் செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்த நேரமும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கும், எனது கணவருக்கும், எனது இல்லத்துக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் தொடர்ச்சியாக சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
அதிமுக என்ற மக்கள் சக்தியுடைய அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டது. அதனால் அதிருப்தியில் இருப்பவர்கள், சிலரது தூண்டுதலின்பேரின் தன்னிச்சையாக செயல்பட்டு என்னை மிரட்டி தொந்தரவு செய்வதால், எல்லா விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளேன். காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக